Friday 29 January 2016

சொத்துக்கள் வாங்குகிறீர்களா...?


நீங்கள் ஏதேனும்  சொத்துக்கள்வாங்குகிறீர்களா? எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

மலாய்க்காரர்களின் சொத்துக்களை அவர்கள் பிற இனத்தவர்களிடம் விற்க முடியாது என்று சட்டமே உண்டு. அப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் அவர்களுடைய பூர்விக நிலங்கள் எல்லாம் இந்னேரம் மற்ற இனத்தவர்களிடம் கை மாறி இருக்கும்!

அது போல சீனர்,  இந்தியர் நிலங்கள் எல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் சீனர்கள் அவர்கள் சொத்துக்களை பிற இனத்தவரிடம் விற்பதில்லை. அது அவர்களிடம் உள்ள எழுதப்படாத சட்டம்.

இந்தியர்கள் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். தங்களின் நிலங்களையோ, வியாபார மையங்களையோ இந்தியர்களைத் தவிர மற்ற இனத்தவர்களுக்குத்தான் விற்பனைச்  செய்வார்கள்! குறிப்பாகச் சீனர்களிடம். அதிலே ஒரு உள் நோக்கம்  உண்டு. தமிழன் ஒருவன் முன்னேறுவதை இன்னொறு தமிழன் விரும்பமாட்டான். அங்கே ஒரு பொறாமை ஒளிந்து கொண்டிருக்கும். அதனால் தான் சீனன் பிழைத்துவிட்டுப் போகட்டும். இவனுக்கு நாம் ஏன் விற்க வேண்டும்? என்னும் பொறாமைக் குணம் அவனுக்கு வந்து விடுகிறது.

சீனர்கள் தங்கள் சொத்துக்களை மற்ற இனத்தவர்களிடம் விற்க மாட்டர்கள் என்பதை மேலேக் கண்டோம்.

ஆனால் அவர்களிடமிருந்தும் நாம் சொத்துக்களை  வாங்குகிறோம்; விற்கிறோம். எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பயப்பட என்ன இருக்கிறது? என்று தான் நமக்குத் தோன்றும். சீனர்கள் தங்கள் சொத்துக்களை  மற்ற இனத்தவருக்கு விற்பதில்லை என்பது நூறு விழுக்காடு உண்மை. அப்படி விற்காதவர்கள் ஏன் இந்தியர்களிடம் விற்கிறார்கள்? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

அவர்கள் விற்கின்ற சொத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது தான் அர்த்தம்.

சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் ஒரு சீனரிடமிருந்து நிலம் ஒன்றை வாங்கினார். அது  பட்டணத்தில் அமைந்த ஒரு நிலம். நண்பருக்கு ஏகப்பட்ட கனவுகள். ஒர் இளிச்சவாய சீனன்  இப்படி பட்டணத்தில் உள்ள  ஒரு நிலத்தை விற்றுவிட்டானே என்று அவருக்கு  ஏகப்பட்ட சந்தோஷம்.

நிலம் வாங்கி ஒர் ஆண்டு கூட ஆகவில்லை. அரசாங்கம் அந்த நிலத்தை சாலை அமைப்பதற்காக  எடுத்துக் கொண்டார்கள். அவருக்குக் கிடைத்த அந்த நிலத்திற்கான  நஷ்டஈடு அவர் போட்ட பணத்தில் பாதிதான்.

இந்நேரத்தில் நான் சொல்ல விழைவது ஒன்று தான். சீனர்கள் தங்கள் நிலங்களையோ பிற சொத்துக்களையோ சீனர்களிடம் மட்டும் தான் விற்பார்கள்.  அவர்கள் பிற இனத்தவர்களிடம் விற்க மாட்டார்கள். அவர்கள் அப்படி விற்கிறார்கள் என்றால் அதன் பின்னணியை ஆராயுங்கள். விபரம் தெரிந்தவர்கள் ஒரு பத்து பேரையாவது விசாரித்து விட்டு அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இன்னொரு அனுபவத்தையும் நான் இந்த நேரத்திலே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வியாபாரம் செய்ய கடை ஒன்றை பார்த்தாயிற்று. ஒப்பந்தமும் போட்டாயிற்று. அனைத்தும் சரி தான். ஒர் இரண்டு மாதங்கள் ஆன பின்னர் அந்த சீன நண்பர் கடையை விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ளுங்களேன் என்று எங்களுக்கே அந்தக் கடையைச் சிபாரிசு செய்தார். நல்ல செய்தி தான். கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டு விட்டு எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தோம். அப்போது தான் ஒர் உண்மை வெளியாயிற்று. உண்மையைச் சொன்னால் அந்த நபர் அந்தக்கடையின் உரிமையாளரே அல்ல! அவர் ஒர் இடைத்தரகர்!அவ்வளவு தான்!ஆனாலும் அவர் எங்களை விடுவதாக இல்லை. இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. வழக்குரைஞர் மூலம் சரியான முறையில் ஒப்பொந்தம் போட்டுவிட்டால் அப்புறம் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவருடைய 'அனுபவங்களை' எல்லாம் நம்மிடம் கொட்டித் தீர்த்தார். உரிமையாளர் வெளி நாட்டில் இருப்பதால் அவர் மீண்டும் இங்கு வரப்போவதில்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஊகூம்..! நாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு கிடைக்கின்ற வாடகையே போதும் என்று விட்டுவிட்டார்.

தங்கள் சொத்துக்களை விற்பதற்கு இந்தியர்களை சீனர்கள் நாடுகிறார்கள்  என்றால்  உடனே நாம் விழிப்படைந்து விட வேண்டும். நடக்காத ஒன்று எப்படி நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும்.

ஏமாந்த பின்னர் ஒப்பாரி வைப்பதில் புண்ணியமில்லை.

எனக்குத் தெரிந்த - என் அருகில் உள்ள - மூன்று சீனர்களின் கடைகள் சீனர்களுக்குத் தான் விற்றார்கள்.  அதிகம் பணம் கொடுக்கிறோம் என்று சொல்லியும் அவர்கள் இந்தியர்களுக்கு விற்பனைச் செய்யவில்லை. அதே சமயத்தில் ஒர் இந்தியரின் கடை சீனருக்குத் தான் விற்கப்பட்டது. கூடுதலாகப் பணம் கொடுக்கிறோம் என்று சொல்லியும் அவர்கள் சீனருக்குத்தான் விற்றார்கள்.

சில சமயங்களில் சீனர்கள் சொத்துக்கள் விற்பனையாவது கூட ஒரு மூடுமந்திரமாகவே இருக்கும். அவர்களின் கடைகளை வாடகை எடுத்தவர்களுக்குக் கூட அவர்கள் அறிவிப்பதுமில்லை. எல்லாம் ரகசியமாகவே நடைபெறும். காரணம் உண்டு. நாம் அந்தக் கடையை வாங்குகிறோம் என்று அவர்களிடம் சொல்லியிருப்போம். அதனைத் தவிர்ப்பதற்காக அவர்கள் செய்கின்ற மூடுமந்திரங்களில் இதுவும் ஒன்று.

எந்தவித அறிவிப்பும் இன்றி கடையை விற்றுவிட்டோம் என்பார்கள். நாம் காலி செய்வதைத்  தவிர வேறு வழி இல்லாமல் போய்விடும்.

முதலில் சீனர்கள் தங்கள் கடைகளை இந்தியர்களிடம் வாடகைக்கு விடுவதற்கே யோசிப்பார்கள். அப்படிக் கொடுத்தார்கள் என்றால் அங்கு எப்படி வியாபாரம்  நடைபெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பார்கள். நல்ல முறையில் வியாபாரம் நடைபெறுகின்றது என்றால் தங்களது ஒப்பந்தத்தை நீட்டிக்க மாட்டர்கள். அவர்கள் உள்ளே வந்து விடுவார்கள்.

பொதுவாகவே சீனர்கள் தங்களைத் தவிர பிற இனத்தவர்கள் வியாபாரம் செய்வதை விரும்பவதில்லை. நாட்டின்  பொருளாதாரம் தங்கள் கையில் இரூப்பதையே விரும்புபவர்கள்.ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட சட்டதிட்டங்கள் கடுமையாக்கபட்ட பின்னர் பலவித மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.அதனால் தான் எந்த இனத்தவரும் தொழில் செய்யலாம் என்னும் நிலைமை இப்போது ஏற்பட்டுவிட்டது.

இந்தோனேசிய மக்கள் தொகயில் மூன்றே விழுக்காட்டைக் கொண்ட சீனர்கள் அந்நாட்டின்  பொருளாதாரத்தை தங்களது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கின்றனர்.என்பது ஆச்சரியம் தானே!

ஆனாலும் என்ன தான் அவர்கள் திறமைசாலிகள் என்றாலும் நமது செட்டியார்கள், நமது தமிழ்/இந்திய முஸ்லிம் சமூகத்தினர், நமது குஜாராத்தி சமூகத்தினர், பஞ்சாபியர்  அவர்களோடு ஒப்பிடும் போது  சீனர்களைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி அவர்களை அசைக்க இவர்களால் முடியவில்லை என்பது பெருமைக்குரிய விஷயம் தானே!

சீனர்களிடம் சொத்து வாங்குவது மட்டும் அல்ல, எந்தவிதமான கொடுக்கல்-வாங்கள் அனைத்தும் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய ஒரு விஷயம். எந்த ஒரு விஷயத்திலும் தயவு தாட்சண்யம், நீதி, நேர்மை  பார்க்காத ஒர் இனம் அவர்கள்.

யோசித்துச் செயல்படுங்கள்!










































No comments:

Post a Comment