Tuesday, 12 January 2016
இது சரியான முடிவு தான்!
இது ஒரு சீனப் பெண்ணின் துணிச்சல் மிக்க முடிவு.
சிங்கப்பூரில் கணக்காளராக வேலை செய்தவர் அந்த 30 வயது பெண். 9,000/- வெள்ளி சம்பளம் வாங்கியவர்.
ஜொகூரில் வசித்து வந்த அவரது தந்தை தீடிரென இறந்து போனார். அவர் செய்ததோ ஒரு சிறிய தொழில். சீனப் பலகாரங்கள் செய்து விற்று வந்தார்.
தந்தையின் தொழிலைப் பற்றி மகள் எதுவும் அறிந்திருக்கவில்ல. முதலில் அந்தத் தொழிலைப் புரிந்து கொள்ள வேண்டும். செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தனது தந்தை செய்து வந்த அந்த 16 வகையானப் பலகாரங்களைக் கற்றுக்கொள்ள 18 மாதங்கள் அவருக்குப் பிடித்தன.
கணக்காளராக வேலை செய்த போது அவருடைய வேலை நேரம் 9.00 லிருந்து 5.00 மணி வரை. ஆனால் இபொழுதோ தலை கீழ்மாற்றம்! காலையில் 6..00 மணிக்கெல்லாம் எழுந்து மார்கெட் சென்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும். 10.00 மணிக்குப் பிறகு தான் பலகாரங்கள் செய்யும் வேலை ஆரம்பமாகும். அதன் பின்னர் தனது விற்பனை நிலையத்திற்குக் கொண்டு சென்று விற்பனையை ஆரம்பிக்கும் போது மணி 4.00 ஆகிவிடும். பிறகு இரவு 10.00 மணி வரை வேலை! வேலை! வேலை! இது தான் அவருடைய தினசரி பணி.
தனது தந்தையின் தொழிலை தான் எடுத்து செய்ய வேண்டும் என்று தனது தாயாரிடம் சொன்ன போது அவரது தாயார் அதனை விரும்பவில்லை. இருந்தாலும் மகள் விடுவதாக இல்லை. இது எனது தந்தையின் தொழில், நமது குடும்பத் தொழ்லில். அதனை ஏன் நாம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் பிடிவாதம் அவரிடம் இருந்தது.
இது போன்ற பிடிவாத குணம் நமது சமூகத்தில் குறைந்த அளவில் தான் காணப்படுகிறது. தந்தையார் நடத்தி வருகிற வெற்றிகரமான தொழிலைக் கூட பிள்ளைகள் தொடருவதில்லை. காரணம் நேரங்காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டுமாம். அதனால் அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம்! இப்படித்தான் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் இளைய தலைமுறையினர்.
பெற்றோர்கள், பிள்ளைகள் சிறு வயதாக இருக்கும் போதே தொழிலில் உள்ள சிறப்புக்களைச் சொல்லி வளர்க்க வேண்டும்.
அந்தச் சீனப்பெண்ணுக்குள்ள அந்தத் தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும்.
நாமும் ஒரு வெற்றிப் பெற்ற சமூகமாக மாற வேண்டும். மாறும்! மாறுவோம்!
கோடிசுவரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment