Tuesday 5 January 2016

சிவில் நீதிமன்றமா? ஷரியா நீதிமன்றமா?


சமீபத்தில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒன்று இஸ்லாம் அல்லாதவரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திராகாந்தி என்னும் பெண்மணி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஒரு வயது பெண் குழந்தையை தீடீர் என மதம் மாறிய தனது கணவரிடம் பறி கொடுத்தார். அந்தக் குழந்தையை தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றப் படிகளை கடந்த ஏழு ஆண்டுகளாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். ஈப்போ உயர் நீதிமன்றம் அவரது கணவரால் மதம் மாற்றப்பட்ட மூன்று குழந்தைகளின் மதமாற்றம் செல்லாது என்றும் அவர்கள் தாயிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும்  தீர்ப்பளித்து விட்டது.

இந்திராகாந்தியின் இரண்டு வளர்ந்து விட்ட குழந்தைகள் அவரிடமே சேர்ந்து விட்டனர். ஒரு வயதே ஆகிய குழந்தையோடு கணவர் தலைமறைவாகி விட்டார்.  அவரைக் காவல் துறையினர் கண்டுபிடிக்க இயலவில்லை என்று கையை விரித்து விட்டனர், இஸ்லாமிய அதிகாரிகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அவரை யாரும் நெருங்க முடியவில்லை.

கடைசியாக இந்த வழக்கு மேல் முறையிட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இப்போது மேல் முறையீட்டு நீதிமன்றம் விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க ஷரியா நீதிமன்றமே பொருத்தமான இடம் என்பதாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

அது எப்படி?

ஷரியா நீதிமன்றம் என்பது இஸ்லாமிய வழக்குகளை விசாரிக்கும் ஒரு நீதிமன்றம். ஒர் இந்துவான இந்திராகாந்தி எப்படி ஷரியா நீதிமன்றதிற்குச் செல்ல முடியும்?

இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  இஸ்லாமிய நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் போது இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர்கள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. இஸ்லாம் அல்லாத நீதிபதிகளிடம் இது போன்ற வழக்குகள் கொடுக்கப்படுவதும் இல்லை.

இப்போது இந்த வழக்கின் உச்சக்கட்டம் இந்திராகாந்தி இந்த வழக்கை  கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லுவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.






No comments:

Post a Comment