கேள்வி
அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளராக சசிகலா வரும் வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறீர்களா?
பதில்
அவர் பொதுச் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்குள் சிறப்பாகவே இருக்கிறது.
அ.தி.மு.க.வின் மிக முக்கிய பதவி பொதுச் செயலாளர் என்பது தான். பொதுச் செயலாளர் தான் முதலைமைச்சராக வர முடியும்.
ஜெயலலிதாவின் உயிர்த் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. இத்தனை ஆண்டு காலம் அவருடன் இருந்தவர். அவரோடு இருந்து அனைத்தையும் அனுபவித்தவர்,
ஜெயலலிதாவை வைத்தே கோடிக்ணக்கில் தமிழகத்தை சுரண்டியவர். இப்போது அவரது குடும்பத்தினர் ஏழு ஏழு தலைமுறைக்கும் பணத்தைப் பற்றி கவலையில்லாதவர்கள்! பணம் இருக்கும் போது பதவியெல்லையென்றால் எப்படி? அவர் சம்பாதித்த பணம் எல்லாம் அரசியல் மூலம் வந்தது! அந்த அரசியலை அவர் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விடமாட்டர்!
பொதுச் செயலாளர் பதவி என்பது அ.தி.மு.க பொதுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்டும் பதவி. பொதுக்குழுவில் உள்ள ஓரிருவர் இப்போதே சசிகலாவின் காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள்! மீதம் உள்ளவர்களைப் பணத்தைப் போட்டு வளைத்து விடுவார்! ஜெயாவோடு இருந்தவர்க்கு இதெல்லாம் கைவந்த கலை!
ஆக, சசிகலா பக்கம் தான் அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசுகிறது! அவர் பொதுச் செயலாளராக வருவார் என்பதே நமது எண்ணம். குறைந்த பட்சம் அடுத்த தேர்தல் வரும்வரை அவருக்கு நல்ல காலம் பிறக்கலாம்!
யார் வந்தாலும் சரி! தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும்! அதுவே நமது ஆசை!
No comments:
Post a Comment