Friday, 16 December 2016
சவியா வைத்தியநாதன் மேயரானார்!
உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலமையகம் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமான குப்பெர்டினோ, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் ஒன்று.. கல்வியில் சிறந்து விளங்கும் சிறிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
புகழ் மிக்க இந்த நகரத்தின் மேயராக சவியா வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளி பெண்ணான இவர் இந்த நகரத்தின் முதன் முதலில் தேர்ந்தேடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இருபது ஆண்டுகளாக குப்பெர்டினோ நகரில் வசித்து வரும் இவர் அமெரிக்கக் குடியுரிமைப் பெற்றவர். எம்.பி.ஏ. படித்தவர்.
இவர் இடைநிலைப்பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாகத் தனது பணியை ஆரம்பித்து அதன் பின்னர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிந்தவர். ரோட்டரி கிளப் போன்ற இயக்கங்களில் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். இன்னும் பல சமூக அமைப்புக்களிலும் தனது சேவைகளைத் தொடர்ந்திருக்கின்றார்.
கடந்த வாரம் டிசம்பர், 8-ம் தேதி குப்பெர்டினோவின் புதிய மேயராக பதவியேற்றிருக்கிறார் சவியா. அவரது உறவினர்களும், நண்பர்களும் இன்னும் பலரும் இந்தப் பதிவியேற்பின் போது கலந்து கொண்டனர். இந்தியாவில் வசித்து வரும் அவரது தாயாரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
இது குறித்து சவியா வைத்தியநாதன் பேசும்போது இனவேறுபாடு பார்க்காமல் தன்னை மேயராகத் தெர்ந்தெடுத்த குப்பெர்டினோ வாழ் மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சவியா வைத்தியநாதனுக்கு நமது வாழ்த்துகள்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment