இந்த அறக்கட்டளை 2006 ல் ஆரம்பிக்கப்பட்ட போது நடிகர் சிவகுமார் ஒரு பெரிய நடிகர் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றவரல்ல. ஒரு சிறிய வருமானம் தான். அந்தச் சிறிய வருமானத்திலும் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற உந்துதல் அவருக்கு இருந்தது. அப்போது பிறந்தது தான் ஏழைகளுக்கு உதவும் இந்தத் திட்டம். அது சிறிய அளவில் தான் இருந்தது என்றாலும் அது பெரிய அளவில் வளர மற்றவர்களும் உதவினர்.
இப்போது சிவகுமார் தனது அறக்கட்டளையை அவரது மகன்களிடம் ஒப்படைத்துவிட்டார். நடிகர் சூரியா அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அதன் வளர்ச்சி இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டு இப்போது இமாலய வளர்ச்சி பெற்றிருக்கின்றது.
ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பலர் இன்று தங்களுக்குப் பிடித்த துறையிலேயே கல்வி கற்று பட்டதாரிகளாகியுள்ளனர். மிகவும் ஏழைகளின் வீட்டுப் பிள்ளைகள். கல்லூரி போக கனவு கண்டவர்கள். ஆனால் பொருளாதாரக் காரணங்களால் தங்கள் கனவுகள் நிறைவேறாது என்று நினைத்தவர்கள். இன்று பட்டதாரிகளாகி தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.
இது வரை அகரம் அறக்கட்டளை சுமார் 9000 (ஒன்பதினாயிரம்) பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. மிகவும் போற்றத்தக்க ஒரு பணி. சமீபத்தில் வெளியான ஒரு செய்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பல்கலைக்கழகங்களில் இப்போது 500 (ஐநூறு) மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் கல்வி கற்பதாக சூரியா கூறியிருக்கிறார். மிகவும் வரவேற்கத்தக்க ஒரு செய்தி. பொறியியல் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது அனைவரும் அறிந்ததே. அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது அகரம் அறக்கட்டளை.
இந்நேரத்தில் அகரம் அறக்கட்டளையை வாழ்த்துகிறோம். அதன் தோற்றுநர் நடிகர் சிவகுமாரையும் வாழ்த்துகிறோம். இப்போது சூரிய தலைமையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் அகரம் அறக்கட்டளை வெகு விரைவில் ஒரு லட்சம் மாணவர்களைக் கொண்டு பீடுநடை போட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!

No comments:
Post a Comment