"பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு!" கவியரசு கண்ணதாசனின் கனல் வரிகள்!
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று அனைத்தையும் காதில் ஏற்றிக் கொண்டிருந்தால் எதுவும் ஆகாது!
உனக்கு நாட்டுப்பற்று இல்லை என்று சொன்னால் "ஆமாம் நாட்டுப்பற்று இல்லை! என்ன செய்ய? எனக்கு ஒரு வேலை கூட கொடுக்க முடியாத உனக்கு என்ன பற்றை எதிர்பார்க்கிறாய்?"
உனக்கு மொழிப்பற்று இல்லை என்று சொன்னால் "ஆமாம் இல்லைதான்! நான் என்ன தான் படித்துக் கிழித்தாலும் ஓர் அரசாங்க வேலை கூட உன்னால் கொடுக்க முடியவில்லையே! என்ன மொழிப்பற்றை எதிர்பார்க்கிறாய்? உனக்கு ஒரு மொழியை உருவாக்கிக் கொடுத்ததே நாங்கள் தானே!"
உன் தாய் மொழி பள்ளி எதற்கு என்று கேட்கிறாய்? "தாய்மொழிப் பல்ளிகள் எங்களுக்கு அவசியம் தேவை. கல்வி எங்களுக்கு அவசியம். நாங்கள் என்ன மதப்பிரச்சாரத்துக்கா தாய்மொழி வேண்டும் என்கிறோம். எங்களது மொழி எங்களது உரிமை. அந்த உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை!"
கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளை நாங்கள் தான் எதிர்த்தோம், நீங்கள் அல்லவே? "யார் சொன்னார்? இந்நாட்டில் பயங்கர்வாதிகளுக்கு எதிராக எத்தனை உயிர்களை நாங்கள் தியாகம் செய்திருக்கிறோம். அது போதாதா? எனக்குத் தெரிந்த ஒரு தமிழர், இரத்தினம் என்பவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். நேரடியாக நான் பார்த்திருக்கிறேன். இன்னும் எங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து கொண்டுதானே இருக்கிறோம்."
அதனால் நண்பர்களே! பைத்தியக்காரனின் உளறல்களுக்கெல்லாம் உங்களைச் சுருக்கிக் கொள்ளாதீர்கள். நாம் நமது வேலையைப் பார்ப்போம். நமது குடும்பங்களை வளர்த்தெடுப்போம். கல்வியில் சிறந்து விளங்குவோம். வியாபாரங்களில் ஈடுபடுவோம். வியாபாரத்தை ஊக்கப்படுத்துவோம்.
கடைசியாக ஒன்று சொல்வேன். நமது வியாபாரங்களை ஊக்குவியுங்கள். ஐந்து காசு கூடுதல் என்றாலும் தமிழர்களிடமே வாங்குங்கள். நமது பணம் நம் இனத்தாரிடமே பழக்கத்தில் இருக்கட்டும். இங்கு நாம் சீனர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் தங்களது இனத்தாரிடமே வாங்கும் பழக்கம் உடையவர்கள். அதுவே நமக்கும் - அந்தப் பழக்கம் வர வேண்டும்.
ஆமாம் எதைப்பற்றியும் கவலை வேண்டாம். பைத்தியக்காரனைப் பைத்தியம் பிடித்து அலைய விடுங்கள். நம் முன்னேற்றம் தான் அவனது பைத்தியத்தை இன்னும் அதிகமாக்கும். அது தான் நமக்கு வேண்டும். அது போதும்!
No comments:
Post a Comment