தனக்கு மன்னிப்பு வாரியம் மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதாக மனு செய்திருந்தார். அவரது தண்டனை காலம் பன்னிரெண்டு ஆண்டுகள். மன்னிப்பு வாரியம் அதனை ஆறு ஆண்டுகளாக குறைத்தது. அவர் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 210 மில்லியன் ரிங்கிட்அதனை 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைத்தது மன்னிப்பு வாரியம்.
மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவு நஜிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அவர்கள் முழுமையான விடுதலையை எதிர்பார்த்தனர். அபராதமும் அதிகம் என நினைக்கின்றனர். ஏறக்குறைய அம்னோவின் நிலைப்பாடும் அது தான்.
ஆனால் மக்கள் என்ன நினைக்கின்றனர்? அவர் முழுமையான சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தான் மக்கள் நினைக்கின்றனர். அவருக்கான அபராதமும் குறைவதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் பணம், அவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். அரசியல்வாதிகளின் திருட்டுத்தனத்தை மன்னிப்பு வாரியம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தான் மக்களின் நிலை.
அல்லது வேறு வகையிலும் மன்னிப்பு வாரியம் இதனைக் கையாண்டிருக்கலாமோ என்று நினைக்கது தோன்றுகிறது. சிறைத்தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிட்டு அபராதத்தை முழுமையாகக் கட்டசொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. காரணம் அது மக்களின் வரிப்பணம். நாட்டின் பொருளாதாரச் சிக்கலுக்குப் பணம் மிகத்தேவையான காலகட்டம் இது. அதனை விட்டுவைக்கக் கூடாது. பணத்தை கட்டாயமாக வசூலிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு.
நஜிப் அவர்களின் வழக்கக்குப்பின்னர் இன்னும் பல வழக்குகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள். பல கோடிகளைக் கபளீகரம் செய்திருக்கின்றனர். வருங்காலங்களில் அவர்களும் மன்னிப்பு வாரியத்திடம் மனு செய்யத்தான் செய்வார்கள். அப்போதும் அரசாங்கம் இப்போது செய்வதையே செய்ய வேண்டிய சூழல் வரத்தான் செய்யும்.
குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்மானிக்கின்றது. மன்னிப்பு வாரியம் அவர்களை மன்னித்து தண்டனையைக் குறைக்கிறது. அதைக்கூட மன்னித்துவிடலாம். அபராதத்தைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்படியென்றால் நீதிமன்றம், தீர்ப்பு என்பதெல்லாம் வேடிக்கைக்குத் தானா!
No comments:
Post a Comment