டாக்டர் மு.வ.
டாக்டர் மு.வ. என்றால் அறியாத தமிழர் இல்லை. தமிழ் இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமை அவர்.
மருத்துவம் பார்க்கும் டாக்டரை விட மு.வ. அவர்கள் தான் புகழின் உச்சியில் இருந்தவர். அது ஒரு காலம். மருத்துவம் பார்க்கும் டாக்டரை நாம் பார்த்திருப்போம். அவர் நமக்கு சிகிச்சை அளித்தவர் என்பது தெரியும். அதற்கு மேல் தெரிய நியாயமில்லை.
டாக்டர் மு.வ. அவர்களின் காலத்தில் முனைவர் என்கிற வார்த்தை பயன்பாட்டில் இல்லை. அதனால் டாக்டர் என்னும் வார்த்தையே அவரோடு கெட்டியாய் ஒட்டிக் கொண்டது.
ஆனால் இன்றைய நிலைமை வேறு. அந்த இரண்டு வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கின்றன. ஒன்று மருத்துவர் இன்னொன்று மருத்துவம் அல்லாத பிற துறைகளில் பி.எச்.டி. பட்டம்பெற்றவராக இருக்கலாம். அதற்கு டாக்டர் மு.வ. ஓர் எடுத்துக்காட்டு.
இங்கு நாம் தரத்தில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று பேச வரவில்லை. இரண்டுமே கடுமையான கல்விகள் தாம். இருவருமே டாக்டர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினால் குழப்பங்கள் ஏற்படுவது சகஜம் தான். அதனால் தான் முனைவர் என்கிற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த செய்தி இது. மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து அவர்களைப்பற்றி ஒரு நிருபர் எழுதியது: டாக்டர் மாரிமுத்து அவர்கள் பேராசிரியராகவும் இருக்கிறார். மருத்துவ டாக்டராகவும் இருக்கிறார்! என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. டாக்டர் என்றால் மருத்துவர். முனைவர் என்றால் ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர், டாக்டர் என்று பயன்படுத்தினால், குழப்பங்கள் வரத்தான் செய்யும். சமீபகாலங்களில் நான் ஏமாந்து போயிருக்கிறேன்.
முனைவர்கள் யாரும் இப்போது டாக்டர் என்கிற சொல்லை பயன்படுத்துவதில்லை. பொது மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்ள முனைவர்கள், டாக்டர் என்கிற சொல்லை தவிர்க்க வேண்டும். வலிந்து டாக்டர் என்னும் போது குழப்பத்தை ஏற்படுத்தும்.
முனைவர், முனைவர் தான். எத்தனை, எவ்வளவு ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் முனைவர் பட்டம் பெறுகின்றனர். அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். டாக்டர் டாக்டராக இருக்கட்டும். முனைவர் முனைவராக இருக்கட்டும். அதுவே சரி!
No comments:
Post a Comment