தோல்வி வருவது நாம் துவண்டு போவதற்காக அல்ல. தோல்விகள் வருவது நம்மைக் கூர்மைப் படுத்துவதற்காக, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிஒளிவதற்காக அல்ல!
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் அல்ல. பணம் வரும் போகும். ஆனால் அந்தப் பணத்தை தக்க வைத்துக் கொள்வது தான் வெற்றி. அதே போல தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. தோல்வியை அப்புறப்படுத்திவிட்டு அடுத்துக்கட்ட வெற்றியை நோக்கிப் பயணிப்பது தான் வெற்றிக்கான வழி.
வாழக்கையை ஆரம்பிக்கும போது, குழந்தை பருவத்தி,ல், எத்தனையோ இடர்பாடுகளை, தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். நடக்க ஆரம்பிக்கும் போது எத்தனையோ முறை விழுந்து எழுந்த பின்னர் தான் நடக்க ஆரம்பித்திருக்கிறோம். அப்போது நமது சுற்றங்கள் அனைவரும் நம்மை ஒதுக்கிவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய நமக்கு உற்சாகத்தைக் கொடுத்து நம்மை ஊக்குவித்தார்கள். ஆனால் நாம் வளர்ந்துவிட்ட பிறகு நாம் தோல்விகளைச் சந்தித்தால் அதே சுற்றம் நம்மை 'கையாலாகதவன்' என்று முத்திரை குத்துகிறது!
முதல் முயற்சியே வெற்றி என்று சொல்ல எந்தக் கொம்பனும் இல்லை. அப்படியெல்லாம் சினிமாவின் காணலாம். குறைந்தபட்சம் ஓரிரு தோல்விகளைக் கண்ட பிறகு தான் வெற்றியை நோக்கிய பயணம் அமையும்.
தோல்வி என்றாலே நமக்குப் பயத்தை ஏற்படுத்துவது உண்மைதான். அதற்காக எடுத்ததெற்கெல்லாம் தோல்வி ஏற்படுமோ என்கிற பயம் இருந்தால் எதனையுமே சாதிக்க முடியாது.
அதுவும் பரிட்சைகளில் தோல்வி ஏற்பட்டால் 'அதற்கென்ன அடுத்த முறை இன்னும் சிறப்பாக வெற்றி பெறுவோம்' என்கிற எண்ணம் இருந்தால் போதும். அந்த எண்ணம் பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும். தோல்வி என்றதும் ஏதோ இந்த உலகமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைப்பது தான் பிரச்சனை.
எல்லாமே சாதிக்கக் கூடியவை தான். இதற்கு முன்னர் அனைத்தும் இந்த மனித இனத்தால் சாதிக்கப்பட்டவை தான். புதிது என்று சொல்ல எதுவுமில்லை!
No comments:
Post a Comment