மலேசிய அரசியலில் புதிய வரவு: பெர்சாமா
நாட்டில் இந்தியர் பிரச்சனைகள் அதிகம் என்பது எல்லாருக்கும் தெரியும். ம.இ.கா. வுக்கு முழுமையாகத் தெரியும். அவர்கள் என்றோ ஒதுங்கிக் கொண்டார்கள்! ஒற்றுமை அரசாங்கத்திற்கும் தெரியும். கண்டு கொள்ளத்தான் ஆளில்லை!
அதனால் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கிவிட்டு "எங்களால் அது முடியும், இது முடியும்!" என்று மார்தட்டினால் யாரும் நம்பப் போவதில்லை! அது அவர்களுக்கே தெரியும்!
ஒன்று மட்டும் நமக்குத் தெரிந்துவிட்டது. இந்த இந்தியர் கட்சிகளால் எதுவும் ஆகப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. ஒரு NGO செய்கின்ற வேலையைக் கூட இவர்களால் செய்ய முடியாது! அந்த அளவுக்குத் தெளிவில்லாதவர்கள்! ஏதோ பெயருக்கு ஒரு சிலரை வைத்துக் கொண்டு கொஞ்ச நாளைக்கு ஆட்டம் ஆடுவார்கள்!
சீன சமூகத்தைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்ட சமூகம். கல்வியில் அவர்களை அடிச்சிக்க ஆளில்லை என்கிற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாகக் கட்சிகளையா ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார்கள்? நாம் பொருளாதாரத்தில் வளர வேண்டும். கல்வியில் வளரவேண்டும். அதில் கவனம் செலுத்தி வளர்ந்தால் போதும். புதிது புதிதாகக்கட்சிகளை வளர்த்து என்ன செய்யப்போகிறோம்?
ஆக, இந்தக் கட்சிகளால் ஆகப்போவது எதுவுமில்லை! அவர்களுக்குத் தாங்களும் தலைவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்! அதற்கு நாம் தான் ஏமாந்தவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்! நாம், நம்முடைய கல்வித்தரம், பொருளாதார உயர்வு - இவைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
லட்சிகளைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் இல்லாமலேயே அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்! அவர்கள் ஆட்டத்தை அவர்கள் ஆடட்டும்! நாம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்!
No comments:
Post a Comment