மிருகங்களைக் கொல்லுவதற்கு வகை வகையாக வழிகள் தேடி அலைகிறது மனிதக் கூட்டம்!
என்ன சொல்ல? மனிதர்கள் மனிதாபமற்றுப் போனோம். மடையர்கள் ஆனோம். மனித நேயம் என்பதையே இழந்துவிட்டோமோ என்கிற கவலை கூட நமக்கு ஏற்படுகிறது.
மேலே உள்ள படத்தைப் பாருங்கள். மனிதன் ஒருவன், சாக்குப் பையில் பூனையை உள்ளே போட்டுக் கட்டி ஆற்றில் வீசுகிறான். என்ன கொடூரம் பாருங்கள். சும்மா வீசிவிட்டாலாவது அது பாட்டுக்குப் போய்விடும்.
சமீப காலங்களில் இது போன்ற ஏராளமான செய்திகளை நாம் பார்க்கின்றோம். பூனைகளை துணி துவைக்கும் சலவைகளில் போட்டு அரைத்து விட்டுப்போனதைப் பார்த்தோம். நாய்களை மோட்டார் சைக்கிளில் வைத்து இழுத்துக் கொண்டு போனதைப் பார்த்தோம். நடக்க முடியாத கீழே விழுந்த பசுமாட்டைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு போனதைப் பார்த்தோம். கண்ட இடங்களில் காக்காய்களைச் சுடுவதால் காக்கை ஒன்று உணவகத்தில் சூப் போடும் பானைக்குள் வந்து விழுந்ததைப் பார்த்தோம்!
நாளுக்கு நாள் இது போன்ற அராஜகங்கள் அத்து மீறுவதை வேடிக்கைத் தான் பார்க்க முடிகிறது. இயக்கங்கள் பல தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தத்தான் செய்கின்றன. ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை.
அரசாங்கத்தில் பணிபுரிபவர்களே பலருக்குத் தெரிய இது போன்ற வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். பெரும்பாலும் நகராண்மை கழகத்தினர் நாய்கள், பசுக்களை எப்படி நடத்துகின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அரசாங்கத்தில் உள்ளவர்களே செய்தால் அரசாங்கமே அதனை ஊக்குவிப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
என்னவோ மலேசியர்களுக்குப் பாவ புண்ணியம் என்பதில் நம்பிக்கை இல்லையோ என்று தான் தோன்றுகிறது. இரக்கம் என்று ஒன்று இருப்பதாகவும் தெரியவில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் என்ன ஆனார்களோ!
இறைவா! இந்த மிருகவதையை நீர் தான் தடுக்க வேண்டும்! வேறு யாரிடம் முறையிடுவது?
No comments:
Post a Comment