Monday 24 April 2017

பெர்லிஸ் முப்தி சர்ச்சையில் சிக்கினார்!


ஒரு மதத்தைப் பற்றி இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர் விமிர்சிப்பது அல்லது கருத்துரைப்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை சிலர் புரிந்து கொள்ளுவது இல்லை.

இப்போது நாம் ஏன் இந்தியாவைச் சேர்ந்த,  ஸாகிர் நாயக்கைப் பற்றி ஏன் எழுதுகிறோம், பேசுகிறோம் என்பது குறைந்தபட்சம் ஒரு சிலராவது புரிந்திருக்கும். ஸாகிர் நாயக் பிற இனங்களிடையே, பிற மதித்தினரிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கும் ஒரு விஷக்கிருமி என்பது தான் உண்மை.

ஸாகிர் நாயக்கின் வருகைக்கைப் பின்னரே இந்து மதத்தினருக்கும் இஸ்லாமிய மதத்தினருக்கும் பிரிவுகள் அதிகரிக்க ஆர்ம்பித்திருக்கிறது/ மீண்டும் மீண்டும் போலிஸ் புகார்கள்!  எத்தனையோ ஆண்டுகளாகக் கட்டிக் காத்த மத இணக்கம் இப்போது  கேள்விக்குறியாகி விட்டது!

கடைசியாக இப்போது பெர்லிஸ் மாநிலத்தின் முப்தி, டத்தோ முகமது  அஸ்ரியும்  களத்தில் இறங்கியிருக்கிறார்!. பெர்லிஸ் மாநிலத்தின் சமய விவகாரங்களில் மாநில ஆலோசகர். மிகப் பெரிய பதவி. மற்ற மதங்களையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் கேவலப்படுத்தக் கூடாது என்பதை அறிந்தவர். என்ன செய்வது?  அவருக்கும் இப்படி ஓர் ஆசை! இந்து மதத்தினரைக் கேலி செய்வது, கேவலப்படுத்துவது! அவருக்கு அப்படி என்ன கட்டாயம் என்று நமக்குத் தெரியவில்லை! மற்ற மதத்தை சிறுமைப்படுத்தினால் தான் தனக்குக் கௌரவம் என்று நினைக்கிறாரோ?



டத்தோ அஸ்ரி தனது முகநூலில் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்து சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் அந்தக் கவிதை அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இதற்கு முன்பும் இந்த சமயத்தை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்தும் எழுத்துக்களையும் எழுதியிருக்கிறார்.

ஒரு மதப் பெரியவர் என்கிற வகையில் அவர் மீது அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவருக்குக் கிடைக்கும் அந்த மரியாதையே,  தான் எப்படி எழுதினாலும் தன்னை யாரும் ஒன்றும் செய்து விட  முடியாது என்று அவர் நினைக்கிறார்.

அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.இன்னும் தொடர்கின்றன. ஆனால் டத்தோ அஸ்ரிக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை விளையாட்டு!

ஒன்றை அவருக்கு நாம் நினைவுறுத்துகிறோம். நாம் ஐம்பது, அறுபது ஆண்டு காலம் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் சமூகம் நாம்.. பிற மதத்தினர் முஸ்லிம்களை வெறுக்கும் வேலைகளில் டத்தோ அவர்கள் ஈடுபடக் கூடாது! எங்கோ இருந்து வந்த ஒரு ஸாகிருக்காக நாம் ஆபத்தான விளயாட்டுக்களில் ஈடுபடக் கூடாது என்பதே நமதுவேண்டுகோள்.

தனது வேடிக்கை விளையாட்டுக்களை முப்தி அவர்கள் நிறுத்துவார் என எதிர்பார்ப்போம்!  நல்லதே நடக்கட்டும்! நாட்டின் நலனே நமக்கு முக்கியம் என வலியுறுத்துவோம்! மலேசியா வாழ்க!





No comments:

Post a Comment