Thursday, 16 November 2017
கேள்வி - பதில் (65)
கேள்வி
கமல்ஹாசனின் முதலமைச்சர் கனவு நிறைவேறுமா?
பதில்
நிறைவேறுமா, நிறைவேறாதா என்று இப்போதைய நிலையில் சொல்ல முடியவில்லை. தமிழக மக்களின் மன நிலை எப்படிப் போகும் என்று கணிப்பது மிகவும் கடினம்.
அவர் பேசும் போது நல்ல அறிவுஜீவியாகவே தோன்றுகிறார். நல்ல வாதங்களை எடுத்து வைக்கிறார். நல்ல திறமைசாலியாகவே நமக்குத் தோன்றுகிறது.
ஆனாலும் ஒரு சினிமா நடிகர் என்னும் போது கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஒரு சினிமா வசனகர்த்தாவான கருணாநிதியை அவ்வளவு சீக்கிரத்தில நாம் மறந்துவிட முடியாது. "பராசக்தி" படம் வெளிவந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அடாடா! தமிழகத்துக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. தமிழன் தலை நிமிர்ந்து விடுவான் என்னும் எதிர்பார்ப்பு எத்திசையையும் ஒங்கி ஒலித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. தமிழர் நடுவே இப்படி ஒரு தமிழனா என்று வியந்து அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. இப்போது பார்க்கும் போது நம் அனைவரையுமே ஒரு தெலுங்கர் முட்டாளாக்கி விட்டரே என்று நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது! கருணாநிதி ஒரு தெலுங்கர் என்பதே ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் எனக்கே தெரிய வந்தது! அந்த அளவுக்கு அவர் தமிழர் வேஷம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் தெலுங்கர் என்பதற்காக அவரை நான் வெறுக்கவில்லை. ஆனால் தமிழனைக் குடிகார இனமாக மாற்றியமைத்தாரே அதுவே போதும் அவர் ஒரு தமிழர் துரோகி என்று!
கமல்ஹாசன் தமிழன் தான். வரவேற்கலாம் தான். அவர் என்ன தான் தன்னைப் பிராமண எதிர்ப்பாளன் என்று சொல்லிக் கொண்டாலும் இன்றைய நிலையில் அப்படியெல்லாம் ஏமாந்து விடக்கூடாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பிராமணன், பிராமணனாகத்தான் இருப்பான். மத்தியில் பிராமணர்கள் ஆட்சி. தமிழகத்திலும் அவர்களின் ஆட்சி தான்! கமல்ஹாசன் எப்படி ஒரு தமிழனாக இயங்க முடியும்? அவர் சுதந்திரமாக இயங்க விடுவார்களா பிராமணர்கள்? எதிர்க்க முடியாத நிலையில் அவரும் அவர்களோடு இணைந்து கொண்டால்...?
எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. அவரின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அவர் முதலமைச்சராக வரலாம்!
நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment