Wednesday, 22 November 2017
கேள்வி - பதில் (66)
கேள்வி
நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தாரே அதனால் என்ன பயன்?
பதில்
கமல் அரசியலுக்குப் புதியவர் என்பதால், அரசியல் அனுபவம் பெற்ற பினராயி விஜயிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினார் என்பதாக செய்திகள்வெளியாயின. அது மட்டும் அல்ல மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மம்தா பானர்ஜீ என்னும் ஒரு முதலைமைச்சரையும் அவர் சந்தித்திருக்கிறார்.
இது ஒரு நல்ல முயற்சி தான். தனக்குத் தெரியாத ஒரு புதியத் துறையைத் தேர்ந்தெடுக்கும் போது சில அனுபவங்களைப் பெறவாவது இது போன்ற பேச்சு வார்த்தைகள் தேவை தான். அதனை அவர் செய்திருக்கிறார். நமக்கும் அது பொருந்தும்.
கமல், கேரள முதல்வரைச் சந்தித்து என்ன பேசினார் என்பது தெரியாவிட்டாலும் தமிழ் நாட்டைப் பாதித்த/பாதிக்கிற ஒரு சில விஷயங்களையாவது அவர் பேசியிருந்தால் மனதுக்குக் கொஞ்சம் நிறைவாக இருந்திருக்கும். கமல் தமிழக முதல்வர் அல்ல. அவர் பேசுவதால் எந்தப்பயனும் இல்லை என்பது நமக்கும் தெரியும்.
எது எப்படியோ, ஒரு விஷயம் மனதைக் குடைந்து கொண்டே இருக்கிறது. கேரளாவில் ஒரு விபத்தில் பாதிப்படைந்த ஒரு தமிழருக்கு எந்த ஒரு கேரள மருத்துவமனையும் அவருக்குச் சிகிச்சை அளிக்க ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் இன்னும் இரண்டு தமிழர்களுக்கும் அதே கதி தான். மருத்துவமனைகள் கை விரித்து விட்டன.
இது ஏன் என்று நமக்குப் புரியவில்லை. சாகும் நிலையில் இருந்தும் கூட அவர்கள் உதவத் தயாராக இல்லை. ஆனாலும் தமிழ் நாட்டில் அவர்கள் என்னவொரு நிம்மதியான வாழ்க்கை வாழுகிறார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஊடகத் துறையில் அவர்களின் செல்வாக்கு அதிகம். சினிமா, சின்னத்திரை என்று எடுத்துக் கொண்டாலும் அவர்கள் தான் முன்னணியில் நிற்கிறார்கள். ஏன்? இன்றைய நிலையில் சென்னை நகரில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம். இதனையே நாம் கேரளாவில் பார்க்க முடியுமா? தமிழர்களைக் கேரளாவில் பார்த்தாலே அவர்களை விரட்டி அடிக்கிறார்களாம் மலையாளிகள். இதனை நான் சொல்லவில்லை. ஒரு மலையாளியே இதனைச் சொல்லுகிறார்! அவரே சொல்லுகிறார்: நான் தமிழ் நாட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறேன். யாரும் என்னை முறைத்துக் கூடப் பார்த்ததில்லை என்கிறார்.
அது தான் தமிழன் செய்கின்ற தவறோ? அனைவரையும் வரவேற்பதே தமிழனுக்குக் கொள்ளி வைக்கிறதோ? நமது கொள்கையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ?
அது சரியோ, தவறோ தெரியவில்லை! ஆனால் கமல்ஹாசன் இது பற்றிப் பேசியிருந்தால் நமக்கும் சந்தோஷமே! வெறும் சந்திப்பு என்பது யாருக்கும் பயனில்லை!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment