இந்த நிகழ்ச்சி இந்தியா, உத்ரகாந்த் மாநிலத்தில் நடந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள். சமீபகாலங்களில் கணவர் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருந்ததால் அவர்களின் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டது.
அதனால் விவாகரத்து ஒன்றே வழி என்கிற நிலைமை. ஆனாலும் அந்தப்பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியே வந்திருக்கிறான் அந்தக் கொடூரன். அவனோடு அவ்னுடைய பெற்றோர்களும் சேர்ந்து கொண்டனர்.
இந்த நேரத்தில் அவனுக்குப் பயங்கர புத்திசாலித்தமான ஒரு யோசனை வந்திருக்கிறது! ஒரு காப்புறுதி நிறுவனத்தில் 25 இலட்சம் ரூபாய்க்கான ஒரு பாலிசி தனது மனைவியின் பெயரில் எடுத்திருக்கிறான். எடுத்த தேதியோ 15 ஜூலை. அந்தப் பெண்மணி இறந்த தேதியோ ஆகஸ்ட் 11. அந்தப் பெண்மணி கொல்லப்பட்டிருக்கிறார் என்கிற சந்தேகம் வரவே கணவனின் திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன.
இப்போது போலீசார் அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற ரீதியில் தங்களது பணியை ஆரம்பித்திருக்கின்றனர். அந்த வேளையில் தான் அந்தப் பெண்மணிக்குப் பாம்பின் விஷத்தை ஊசியின் மூலம் ஏற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது. விஷ ஊசி, துன்புறுத்தல் என்று பல்வேறு வகையில் அந்தப் பெண்மணி துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.
படிப்பினை: எதற்கோ ஆசைபட்டு கடைசியில் எதுவுமே ஆகாமல் தனது குடும்பத்தோடு கூட்டாக சிறை தான் அடைக்கலம்! நியாங்கள் தோற்பதில்லை!
No comments:
Post a Comment