விதி மீறல் என்றாலே இளையவர்களுக்கு ஒரு 'கிக்' கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும்! அதுமட்டும் அல்ல அகப்பட்டால் அவர்களுக்கும் 'கிக்' கிடைக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
என்ன தான் சொன்னாலும் ஒரு சிலருக்கு எதுவும் மண்டையில் உறைப்பதில்லை. ஆனால் சமீபத்தில் பினாங்கில் நடந்த சம்பவம் நமக்கே தலையைச் சுற்றுகிறது. இத்தனை மோட்டார் சைக்கிள்களா என்று வியக்கவைக்கிறது.
நடு ரோட்டில் சாகசம் செய்கிறார்களா? ஏதோ தேன் கூட்டைக் கலைத்துவிட்ட ஒரு தோற்றம்! தீடீரென்று நிலநடுக்க ஏற்பட்டு ஓட்டம் எடுக்கிறார்களா? என்னதொரு காட்சி!
போலீசாரின் சலைத்தடுப்பை திட்டமிட்டே அவர்கள் மீறவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார், சாலைத்தடுப்பை மீறியதற்காக! மேலும் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காகவும் 25 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நமது இளைய தலைமுறை இப்படி சாலை விதிமுறைகளை மீறுவதும், அவர்களைக் கைது செய்வதும், இது தேவை தானா என்று கெட்கத் தோன்றுகிறது. ஏன் இவர்கள் இப்படி எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் நமக்குப் புரியவில்லை. இவர்களுக்கு என்ன தான் குறை என்றும் தெரியவில்லை.
இவர்களெல்லாம் பெரும்பாலும் பள்ளி மாணவர்களாகத்தான் இருக்க வேண்டும். வருங்காலத் தலைமுறையினர். வருங்காலப் பட்டதாரிகள். வருங்காலத் தலைவர்கள். நாட்டை வழிநடத்த வேண்டியவர்கள். இந்த வயதிலேயே விதிகளை மீற வேண்டும் என்னும் வேட்கை இவர்களுக்குள் எப்படி எழுந்தது? விதிகளை மீறுவது வருங்காலங்களில் ஊழலை ஊக்குவிக்கும் என்பதும் சரியாகத்தானே இருக்கும்!
என்னவோ போங்கள். காவல்துறையினரைத் தவிர வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பள்ளிகளும் சரியான இடங்களாக இல்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment