என்ன கஷ்டகாலமோ தெரியவில்லை. நமது உணவகங்கள் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கின்றன.
சாக்குப்போக்குச் சொல்லுவதில் பயனில்லை. ஆள் பற்றாக்குறை என்றெல்லாம் சொல்லி அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிகள் வேண்டாம். உங்களுக்கு ஆள் பற்றாக்குறை என்பதற்காக நீங்கள் எதையாவது போடுவீர்கள், வாடிக்கையாளர்கள் அதனைச் சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் எங்களுக்கு இல்லை.
எது எப்படியோ இப்போது எல்லா உணவகங்களின் மீதும் நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. யாரையும் நம்புவதற்கில்லை. ஆள் பற்றாக்குறை என்கிற குறை ஒரு பக்கம், போதுமான ஆள்கள் இருந்தாலும் அங்கும் இது போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம்.
எந்த உணவகங்களாக இருந்தாலும் நமக்கு சுத்தமே முதல் தகுதியாக பார்க்கிறோம். சுத்தத்திற்கே முதலிடம். ஆனால் நமது உணவகங்களில் முதல் எதிரி கரப்பான் பூச்சிகள் தான். இன்னும் எலிகள் தொல்லையும் உண்டு. அதோடு பாத்திரங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. அரைகுறையாக சுத்தம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இத்தனை ஆண்டுகள் எப்படியோ உணவகங்கள் தப்பித்தன. கொஞ்சம் 'சம்திங்' கொடுத்து தப்பித்துக் கொண்டனர். இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் எல்லா காலங்களிலும் அப்படியே தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அன்று உங்களுக்கான நேரம். இப்போது எங்களுக்கான நேரம். அவ்வளவுதான் சொல்ல முடியும்.
ஆனால் நமது இனத்தவர்கள் நடத்தும் உணவகங்களில் இது போன்ற பிரச்சனைகள் வரும் போது அதற்காக நாம் மகிழ்ச்சியடையப் போவதில்லை. அதில் நமக்குச் சந்தோஷமுமில்லை. உணவகங்களுக்கும் ஏகப்பட்ட நஷ்டம். நீங்கள் நஷ்டமடைவதால் இந்த சமுதாயத்திற்கும் நஷ்டம் தான். முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்கள் இப்போது தவறான முன்மாதிரியாக மாறிவிட்டீர்கள்.
நமது அறிவுரை எல்ல்லாம் இது போன்று மீண்டும் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்பது தான்.
No comments:
Post a Comment