Thursday, 23 February 2017
தனியார் கல்லுரிகளா? யோசியுங்கள்!
தனியார் கல்லுரிகளுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புகிறீர்களா, கொஞ்சம் யோசியுங்கள். நீங்கள் பணம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நிச்சயமாக சிறப்பான கல்வி நிலையங்களையே தேர்ந்தெடுப்பீர்கள்.
நல்ல முறையில் இயங்கும் கல்லுரிகளால் உங்களுக்குப் பிரச்சனை இல்லை. அவர்கள், நல்ல பாடத்திட்டங்கள், நல்ல பேராசிரியர்கள், நல்ல விரிவுரையாளர்களைக் கொண்டிருப்பார்கள். நாம் அவர்களைக் குறைச் சொல்லவில்லை.
ஆனால் நாம் இங்கு குறிப்பிடுகின்ற கல்லுரிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளால் நடத்தபெறுகின்ற கல்லுரிகள். தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவர்கள் கல்வி அமைச்சிடமிருந்து தேவையான சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றனர். கல்வி அமைச்சில் வேலை செய்பவர்களுக்கும் இதில் பங்கு உண்டு
இவர்களின் முக்கிய நோக்கம் கல்லுரிகள் நடுத்துவது அல்ல. பணம் சம்பாதிப்பது மட்டுமே! மிகவும் உயரிய நோக்கம்! ஏய்த்துப் பிழைக்கும் ஒரு படித்த கூட்டம்.
இவர்கள் கல்லுரிகள் என்று பெயரை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டம். இவர்களின் விளம்பரங்கள் பெரும்பாலும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் மட்டுமே வரும்.
இவர்கள் மலாய்க்கார மாணவர்களையோ, சீன மாணவர்களையோ விரும்புவதில்லை. அவர்களும் இவர்கள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அவர்களுடைய இலக்கு என்பது தமிழ் - இந்திய மாணவர்கள் மட்டும் தான். பெரும்பாலும் ஏழை மாணவர்கள் தான் இவர்களின் இலக்கு. அவர்கள் கொடுக்கும் கல்வி தரமான கல்வி என்றால் கூட நாம் அவர்களை மன்னித்துவிடலாம். தரமற்ற கல்வி, தரமற்ற விரிவுரையாளர்கள் - ஏதோ ஒரு டியுஷன் வகுப்பு நடத்துவது போல கல்வி நிலையங்களை இவர்கள் நடுத்துகிறார்கள்! கல்வி அமைச்சில் உள்ள சில கருப்பு ஆடுகளின் பின்னால் இவர்கள் ஒளிந்து கொண்டிருப்பதால் இவர்கள் தொடர்ந்து ஏழை மாணவர்களை ஏய்த்துக் கொண்டும், ஏமாற்றிக் கொண்டும் இவர்கள் பிழைப்பை நடுத்துகிறார்கள்!
பெற்றோர்களே! இனி ஏமாற வேண்டாம். தொடர்ந்து நாம் ஏமாறக் கூடாது! நம் இனத்தவனே நம்மை ஏமாற்றுகிறான். இது தான் துக்கம். முடிந்தவரை அரசாங்கக் கல்லுரிகளைப் பயன்படுத்துங்கள். இந்த ஆண்டு இடம் இல்லையென்றால் அடுத்தஆண்டு இடம் கிடைக்கலாம். தனியார் கல்லுரிகளில்சேர்வதின் மூலம் பணத்தையும் இழந்து, தரத்தையும் இழந்து கடைசியாக ஒரு கடன்காரனாக உங்களை வெளியாக்குவார்கள்! இது தான் அவர்களது வாடிக்கை!
தனியார் கல்லுரிகளா? யோசியுங்கள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment