தமிழக ஆளுநரின் முன்னிலையில் முதலைமைச்சர் பன்னிர்செல்வத்திற்கும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா சசிகலாவிட்கும் "நீயா, நானா" போட்டி நடந்து கொண்டிருக்கிறது!
சசிகலாவை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவோடு முப்பது ஆண்டுகள் கூடவே இருந்தவர் சசிகலா. நல்ல நேரம், கெட்ட நேரம் அனைத்திலும் உடன் இருந்தவர். ஜெயலலிதா எப்படி பிரச்சனைகளைச் சமாளித்தார் என்பதை கூடவே இருந்து பார்த்தவர். ஜெயலலிதாவின் பலம் காவல்துறை! காவல்துறையினர் ஜெயலலிதாவுக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்தவர்கள். அவரும் காவல்துறையினரை நன்றாகக் கவனித்துக் கொண்டவர்.
சசிகலாவும் அதே பாணியைத்தான் கையாள்கிறார் என்பதும் உண்மை. மெரினாவில் நடந்த மாணவர்கள் மீதானத் தாக்குதல், மீனவர்கள் மீதானத் தாக்குதல்களின் பின்னணியில் சசிகலாவின் பங்கும் உள்ளது என்பதை மறந்துவிட முடியாது.
ஜெயலலிதாவின் அதே போர்க்குணம் சசிகலாவிடமும் உண்டு. விட்டுக் கொடுக்காத அந்தப் போர்க்குணம்!
கடைசிவரை விட்டுக் கொடுக்கமாட்டார் சசிகலா! என்னன்ன முடியுமோ, அவரிடம் என்னன்ன உள்ளதோ அத்தனையும் அவர் பயன் படுத்துவார்! பின் வாங்குவது அவர் குணமல்ல! சிறு துரும்பு கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுவார்!
ஆனால் அவரிடம் உள்ள அந்தப் போர்க்குணத்தினால் தமிழ் நாடு எந்த அளவு பயன் பெறும்? ஒரு மண்ணும் இல்லை! அவர் கண் முன்னே நிற்பது - அந்த நீண்ட நாலரை ஆண்டுகள் - அது மட்டும் தான்! நாலரை ஆண்டுகள் என்பது அரசியல் கொள்ளையர்களுக்கு ஒரு நீண்ட காலம். ஒரு நாணுறு கோடியாவது நாலாயிரம் கோடியாவது சம்பாத்தித்து விட முடியும்! அதெல்லாம் அவர்களுக்குச் சாதாரணம்!
தேர்தலை எதிர் நோக்கும் பிரச்சனை இல்லை! கட்சி வளர்ந்தால் என்ன, அழிந்தால் என்ன - அது பற்றிக் கவலை இல்லை! மக்களைச் சந்திக்கும் அவசியம் இல்லை!
இது தான் மன்னார்குடியின் இப்போதைய கண் முன்னே உள்ள திட்டம்! இதற்காகத்தான் இவ்வளவு போராட்டங்கள்!
அவரிடம் ஆட்சி போகக்கூடாது என்பதே நமது பிரார்த்தனையாக இருக்கட்டும். தமிழகம் கொள்ளயர்களின் கூடாரமாக மாறிக்கொண்டு வருகிறது! அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என்பது தான் நமது கேள்வி! இன்னும் நாலரை ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டுமோ?
No comments:
Post a Comment