Sunday, 17 June 2018
கேள்வி - பதில் (79)
கேள்வி
"காலா" படம் வெற்றியா, தோல்வியா?
பதில்
இந்த கேள்விக்குப் பதில் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகளை அள்ளி கொடுக்கலாம்!
நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. தூத்துக்குடியில் இருந்து வந்த கட்டளை. நானும் தமிழன் தானே.
ரஜினிக்கு வேண்டியவர்கள் 'மாபெரும் வெற்றி" என்கிறார்கள்! அவருக்கு வேண்டாதவர்கள் "மாபெரும் தோல்வி" என்கிறார்கள்! நடுநிலை என்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஏற்ற சொல்லே அல்ல. அதில் சில ஊடகங்களுக்கு ரஜினியின் மேல் ஒரு பயமும் இருக்கிறது! நாளை அவர் ஆட்சிக்கு வந்து விட்டால்......? என்கிற பயம்!
எனக்குத் தெரிந்த ஒரு இளைஞனிடம் கேட்டேன். "புண்ணியமில்லை! சும்மா இழுவை!: என்று பதில் சொன்னான். என்னால் அப்படி எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ரஜினியின் ரசிகன் தான் ஆனால் அதை விட இயக்குனர் ரஞ்சித்தின் ரசிகன். நிச்சயமாக ரஞ்தித் நல்ல செய்திகளைக் கொடுத்திருப்பார் என நம்பிக்கை உண்டு.
இந்தப் படத்தின் மூலம் யாருக்கு வெற்றி என்றால் அது இயக்குனர் ரஞ்சித்துக்குத் தான். அவர் சொல்ல வேண்டிய செய்திகளைக் சொல்லி விட்டார். அதுவும் ரஜினியின் மூலமாக! அதுவே ஒரு பெரிய வெற்றி.
ஆனால் ரஞ்சித்திற்கு இனி மேல் பெரிய பட்ஜட் படங்கள், பெரிய நடிகர்களை வைத்து படங்கள் எடுக்க வாய்ப்பில்லை! அந்தப் பயம் மற்ற நடிகர்களுக்கும் வந்து விட்டது! அவர் இனி தனது பாணியிலேயே தனக்கு வேண்டியவர்களை வைத்து படங்களை எடுப்பார் என நம்பலாம். அதுவே அவருக்கு வெற்றியைத் தரும்.
அது சரி, காலா வெற்றியா, தோல்வியா? வசூலை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டுமென்றால் - அப்படித்தான் இது நாள் வரை நடந்து வந்திருக்கிறது - வசூல் எதிர்பார்த்தவாறு இல்லை எனத் தெரிகிறது.
அதற்காக தோல்வி எனச் சொல்ல மனம் வரவில்லை!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment