Friday, 29 June 2018
சார்டின்களுக்கு மீண்டும் தடை..!
சீன நாட்டிலிருந்து இறக்குமதிச் செய்யப்படும் சார்டின்களுக்கு மீண்டும் தடை போட்டிருக்கிறது அரசாங்கம். ஆனால் இம்முறை வெவ்வாறு பெயரில் வெளிவரும் சார்டின் டின்கள் இவை.
சமீபத்தில் "RANESA" என்கிற பெயரில் வெளியாகும் சார்டின்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. அவைகளில் கிருமிகள் இருப்பதைச் பரிசோதனைகள் காட்டுவதாக தடுப்புச் சோதனை மையம் அறிவித்திருந்தது.
இம்முறை மேலே படங்களில் காணப்படும் அனைத்துச் சார்டின்களிலும் கிருமிகள் இருப்பதைச் சோதனை மையம் கண்டு பிடித்திருக்கிறது. இவைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல!
ஆனாலும் ஒரு கேள்வி. இத்தனை ஆண்டுகள் எந்த விதமானப் பிரச்சனைகளின்றி நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட சீனப் பொருட்கள் - குறிப்பாக வகை வகையான சார்டின்களுக்கு - இப்போது என்ன நேர்ந்தது? நம்மைக் கேட்டால் ஒன்றும் ஆகவில்லை! எப்போதும் இப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக் கொஞ்சம் 'சரிகட்டி' க் கொண்டு போக வேண்டியிருந்தது! அது முந்தைய அரசாங்கத்தில். இனி மேல் இப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க இப்போதைய அரசாங்கம் தயங்காது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்1
மேலும் இது போன்ற மலிவான சார்டின்களை உணவகங்களுக்குத் தள்ளிவிடும் வழக்கம் உண்டு. யாரும் கண்டுக்கொள்ளப் போவதில்லை! அதே சமயத்தில் பெரிய பெரிய பட்டணங்களுக்கு இவைகள் அனுப்பப்படுவதில்லை! சிறிய சிறிய பட்டணங்கள், கிராமங்கள் தான் அவர்களின் இலக்கு.
எது எப்படியோ, இனி கடமைகளைச் சரியாகச் செய்யாவிட்டால் இருக்கிறது செருப்படி! அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாக செய்யாவிட்டால் இருக்கவே இருக்கிறது கைப்பேசி! வாட்ஸப்! அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துங்கள்! அவர்களை வேலை வாங்குங்கள்!
அது தான் இப்போதைக்கு நாம் செய்ய வேண்டிய வேலை!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment