Saturday, 23 June 2018
ரயில் விபத்தை தடுத்த சிறுமி...!
பயணிகள் ரயிலுக்கு விபத்து ஏற்பட்டால் அது ஒரு நாட்டின் முக்கிய செய்தியாக மாறிவிடும். அதுவே பெரிய விபத்தாக இருந்தால் உலகச் செய்தியாக மாறிவிடும்.
அப்படி ஒரு உலகச் செய்தியாக மாற வேண்டிய ஒரு விபத்து எந்த ஒரு ஆபத்துமில்லாமல் தவிர்க்கப்பட்டு விட்டது. அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர்கள் மிகச் சாதாரண ஏழ்மையில் வாழும் ஏழை எளிய பழங்குடியைச் சேர்ந்த 9 வயது குழந்தையும் அந்தக் குழந்தையின் தந்தையும்.
இந்தியாவின், வட திரிபுரா, தஞ்சரா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுமதியும் அவரின் தந்தை தபர்மனும் மலையிலிருந்து இறங்கி வருகின்ற போது அவர்களின் முன்னால் இருந்த ரயில் பாதை முற்றிலுமாக மண்ணால் மூடப்பட்டிருந்தது. தொடர்ந்தாற் போல பெய்த மழையினால் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையே காணாமற் போயிருந்தது! அந்த நேரத்தில் பயணிகள் ரயில் ஒன்று, இரண்டாயிரம் பயணிகளுடன், அந்த வழியாக, மண்சரிவை அறியாமல், அகர்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரம்.
பெரிய விபத்து ஒன்று தங்கள் கண் முன்னாலேயே நடக்கப் போவதை அறிந்த தந்தையும் மகளும் தங்கள் அணிந்திருந்த சட்டைகளைக் கழட்டி ரயிலை நிறுத்துமாறு சைகைக் காட்டியிருக்கின்றனர். இதன் மூலம் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டிருக்கிறது.
தந்தை, மகள் என்றாலும் இதில் சுறுசுறுப்பாக இயங்கியவர் மகள் சுமதி தான்! அவருடைய துணிகரமான செயல் தான் ரயில் விபத்தை தவிர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. அதனால் தான் அவர் இன்று இந்திய அளவில் "துணிகரமான சிறுமி" என்று எல்லாராலும் பாராட்டப் படுகின்றார்! இரயில்வே துறை இப்போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாறு பணிக்கப்பட்டிருக்கின்றது.
ஏழைச் சிறுமி தான். பழங்குடி சிறுமி தான். அந்தக் குழந்தைக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட அந்தத் துணிவை நாமும் பாராட்டுவோம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment