நீங்கள் சார்டின் பிரியரா? கொஞ்சம் கவனமாக இருங்கள். அதுவும் சீனாவில் இருந்து வருகிற அனைத்துச் சாப்பாட்டுப் பொருள்களும் சாப்பிடுவதற்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். காரணம் சீனப் பொருட்களில் எதுவுமே - ஏன் பல - அது உணவு சம்பந்தமாக இருக்கட்டும் அல்லது தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கட்டும் பெரும்பாலும் தரக்குறைவான பொருட்களாகவே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம்.
புதிதாக நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட ரி.ம. 200,000 வெள்ளி பெறுமானமுள்ள சார்டின்களின் மாதிரிகளைச் சோதித்த போது அதில் "அனிசாக்கியாசிஸ்" என்னும் நோயை உருவாக்கும் கிருமிகள் இருப்பதாக அதன் சோதனைக்குப்புப் பின்னர் பினாங்கு தடுப்புச் சோதனை முனையம் அறிவித்தது. இதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சார்டின் "RANESA' என்னும் வகையைச் சார்ந்தது.
இந்த அனிசாக்க்யாசிஸ் வியாதியின் ஆரம்பம் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி இன்னும் பல.
பொதுவாக சீனாவிலிருந்தி வரும் உணவுப் பொருட்கள் மலிவு என்று நினைத்து வாங்க வேண்டாம். பிள்ளைகளின் உணவுப் பொருட்களில் கூட பிளாஸ்டிக் கலப்பதாகச் சொல்லப்படுகிறது.
உணவுப் பொருட்கள் பல நாடுகளிலிருந்து நமது நாட்டிற்குள் இறக்குமதியாகின்றன. ஆனால் சீனப் பொருட்கள் தான் மக்களுக்கு அதிகமான ஆபத்துக்களைக் கொண்டு வருகின்றன.
சீனப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!
No comments:
Post a Comment