அலட்சியம் அபாயத்தின் அறிகுறி
அலட்சியம் என்பது எல்லாத் துறைகளிலும் நாம் பார்க்கிறோம். அது துன்பத்தைக் கொண்டு வரும். உடனடியாக இல்லாவிட்டாலும் வெளிப்பட வேண்டிய நேரத்தில் அது வெளிப்படும்.
இப்போது நம் கண் முன்னே தெரிவது கொரோனா தொற்று நோய். ஸ்ரீபெட்டாலிங் பள்ளிவாசலில் காட்டிய அலட்சியம் இன்று நாடு முழுவதும் கொரோனா கொடிக்கட்டிப் பறக்கிறது! அரசாங்கத்தால் இன்னும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை!
இந்த அலட்சியத்தால் என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோடி கோடியாக வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை, அதனால் சம்பளம் இல்லா விடுமுறை. அத்தோடு அரசாங்க அதிகாரிகள் "எங்களை எந்த வியாதியும் ஒன்றும் செய்து விட முடியாது!" என்கிற மதமதப்பு!
இன்னும் சில தினங்களில் "இதெல்லாம் கடவுள் செயல்!" என்பதாகச் சொல்லி கடவுள் மீது விரலை நீட்டுவார்கள்!
அலட்சியம் அபாயத்தைக் கொண்டு வரும் என்பது நமக்குப் புரிகிறது. வர்த்தகத் துறையில் உள்ள நாம் இன்னும் அதிகமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலில் அலட்சியம், வாடிக்கையாளர்களிடம் அலட்சியம், கெட்டுப்போன பொருள்களை விற்று சம்பாதிப்பது, சரியான நேரத்தைக் கடைப்பிடிக்காமல் நேரத்தில் காட்டுகிற அலட்சியம் இப்படி ஒவ்வொன்றிலும் காட்டும் அலட்சியும் கடைசியில் எங்கு போய் நிற்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒன்று வியாபாரத் துறையிலிருந்து முற்றாக ஒதுக்கப்படுவோம். அல்லது நஷ்டத்தில் வியாபாரத்தை செய்து கொண்டு மற்றவர்கள் மீது பழி சொல்லிக் கொண்டிருப்போம்! . இரண்டுமே வியாபாரத்திற்கு நல்லதல்ல.
அலட்சியம் என்பது நாம் மக்களை மதிக்கவில்லை என்பது பொருள்,வர்த்தகத் துறையில் உள்ளவர்கள் மக்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் மக்களால் நாம் தான் மிதிபடுவோம்!
அலட்சியம் எதிலும் வேண்டாம்! அது நம்மை படு பாதாளத்திற்கு இட்டுச் செல்லும்!
அலட்சியம் வேண்டாம்! அது ஆபத்தின் அறிகுறி!
Monday, 16 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (72)
செய்யும் தொழிலே தெய்வம்
செய்யும் = தொழிலே தெய்வம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கேள்விப்பட்டதோடு சரி. அதனை நாம் ஏதோ ஒரு தேவையற்ற சொல் என்பது போல அதனை ஒரு பொருட்டாகக் கூட கருதுவதில்லை!
நாம் செய்கின்ற வேலையாகட்டும் அல்லது தொழிலாகட்டும் எதனையும் நாம் "நமது பிழைப்பு" என்கிற அளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? நாம் அக்கறையற்ற ஒரு சமூகம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியும் சொல்ல முடியாது. . நாம் நமது குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம்.
ஆனால் நம்மிடையே உள்ள அந்த குடிகாரச் சமுதாயம் என்று ஒன்று உள்ளதல்லவா அந்தச் சாமுதாயம் தான் நம் கண் முன்னே நிற்கிறது.
அவர்களுக்குப் பொறுப்பு என்று ஒன்றில்லை. தொழில் பக்தி என்று ஒன்றில்லை. தினசரி பணம் வேண்டும். உழைக்க வேண்டும். குடிக்க வேண்டும். தினக்கூலி வாழ்க்கையை அவர்கள் விரும்புகின்றனர். அன்றே வேலை செய்து அன்றே பணத்தைப் பெற்று அன்றே குடித்து முடித்து விட வேண்டும்.
வீட்டில் பெண்டாட்டி, பிள்ளைகள் இருப்பார்கள். மனைவி தான் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். நான் தமிழர்களையே குறி வைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். சுற்றி கொஞ்சம் நோட்டம் விடுங்கள். வேறு சமுதாயத்தில் இதெல்லாம் நடக்கிறதா என்று பாருங்கள்.
நாம் நீண்ட நாள்கள் அடிமைகளாக இருந்து பழகி விட்டோம். அதனை கடந்த அறுபது ஆண்டு கால ஆட்சியில் ம. இ.கா. தலைவர்கள் இன்னும் அதனை அதிகமாக்கி விட்டனர்!
நாம் என்ன செய்கிறோம் என்பது பிரச்சனை அல்ல. ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்யலாம் அல்லது ஏதோ ஒரு சிறு வியாபாரம் செய்யலாம். சிறிதோ, பெரிதோ என்பது பிரச்சனை அல்ல. அது நமது குடும்ப வறுமையைப் போக்குகிறது. பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிகிறது. வேறு தொழில் தெரியாத நிலையில் செய்கின்ற தொழிலை தேய்வமாகக் கருத வேண்டும்.
நமது சமுதாயம் இதில் பலவீனப்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதனை சரி படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளால் இது முடியாது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல செய்யும் தொழிலை நேசிக்காதவன் தொழில் செய்ய இலாயக்கற்றவன்.
ஆனால் அது பற்றியெல்லாம் அவன் கவலைப்படுவதில்லை. அவனது குடும்பத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவன் மற்ற எதனைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை.
வேலை என்பது மனிதனுக்கு முக்கியம். அவனது குடும்பம் பிள்ளைகள் அனைவரும் முக்கியம். அவர்களைக் காப்பாற்ற நாம் வேலைக்குப் போவதும் அவசியம்.
நமது வேலை என்பது தெய்வத்திற்குச் சமம் என்பது பெரியோரின் வாக்கு.
அதனை அலட்சியப் படுத்த வேண்டாம்.

Saturday, 14 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (71)
வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம்
என்ன தான் சொல்லுங்கள் எந்தத் தொழிலாக இருந்தாலும் முதன்மையானது வாடிக்கையளர்களின் திருப்தி தான்.
நம்மிடையே வீடுகளைப் புனரமைப்பு செய்யும் குத்தகையாளர்கள் நிறையவே இருக்கின்றனர். பெரிய அளவில் செய்பவர்களும் உண்டு. சிறிய அலவில் செய்பவர்களும் உண்டு. பெரிய அளவில் செய்பவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாளை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களைப் பற்றிக் கூட நமக்குக் கவலை இல்லை.
ஆனால் சிறிய அளவில் செய்கிறார்களே இவர்கள் தான் நமது இலக்கு. இவர்கள் கீழேயும் போகமுடியாமல் மேலேயும் உயர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள்! ஒரே காரணம் தான். இவர்களிடம் நேர்மை இல்லை, நாணயம் இல்லை. வேலையில் சுத்தமில்லை! உண்மையைச் சொன்னால் இவர்களில் பெரும்பாலானோர் ஏமாற்றுப் பெர்வழிகள்! நல்ல குடிகாரர்கள்!
கைக்குப் பணம் வந்ததும் நண்பர்களோடு கூடி கும்மாளம் அடிப்பவர்கள்! அந்தப் பணம் கூட இவர்களுக்கு ஏதோ வேலைக்காக முன் பணமாக கொடுக்கப்பட்டிருக்கும். பொருள்கள் வாங்க கொடுக்கப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு தண்ணி அடிக்கும் கூட்டம் இது. எதைப் பற்றியும் கவலை இல்லை. பணம் கொடுக்கப்படுவது தண்ணி அடிக்கத்தான் என்கிற கொள்கை உடைய கூட்டம் இது! வேலை செய்யப் பிடிக்காத சோம்பேறி கூட்டம் இது! பணத்தை செலவழித்து விட்டு தங்களது கடைமையைச் செய்யாமல் தலைமறைவாகி விடும் கூட்டம் இது!
இவர்களால் தான் தமிழர் சமுதாயத்தின் பெயரே கெட்டுப் போகிறது. நானே இந்தக் கூட்டத்தினரால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு சிறிய வேலை. அதற்கு எதற்கு முன் பணம் என்று நினைத்து பணத்தை முழுவதுமாக கொடுத்து விட்டேன். அந்த இளைஞனை அதற்கு பின்னர் பார்க்கவே முடியவில்லை! பின்னர் வேறொரு இந்தோனேசியரைக் கூப்பிட்டு அந்த வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று.
அதே போல என் நண்பர் ஒருவர். அவர் வீட்டில் வேலை செய்ய ஆறாயிரம் வெள்ளி என்று பேசி முடிவு செய்தாயிற்று. கடன் வேண்டாம் என்று நினைத்து மொத்த பணத்தையும் கொடுத்து விட்டார். அவ்வளவு தான்! வேலை நகரவே இல்லை! என்னடா என்று தேடிப் பார்த்தால் அந்த நடுத்தர வயதான மனிதர் குடித்துவிட்டு வீட்டை விட்டு நகர முடியவில்லை! இருபத்து நான்கு மணி நேரமும் தண்ணீ! யாராலும் அவரை எழுப்ப முடியவில்லை! அவரால் நிற்க முடியவில்லை! நிற்கக் கூட முடியாதவரால் என்ன வேலை செய்ய முடியும்? கடைசியில் அந்த வேலை நடக்கவே இல்லை!
என்ன தான் குடிகாரனாக இருந்தாலும் நாம் செய்கின்ற வேலையில் நமக்குக் கவனம் இருக்க வேண்டும். நமக்கு அந்த பொறுப்பு இருக்க வேண்டும். நாம் நீண்ட காலத்திறகு அந்தத் தொழிலில் இருக்கப் போகிறோம். அதனை பொறுப்பாக நாம் செய்ய வேண்டும். அந்தத் தொழில் நமது குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. நமக்கு சோறு போடுகிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.
வாடிக்கையாளர்கள் உங்கள் மீது அதிருப்தி அடைந்தால் அப்புறம் உங்கள் ஆட்டம் பலிக்காது!

Friday, 13 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (70)
யாரும் எதிர்பாராத அளவு பாதிப்புகள்
இப்படி ஒரு மாபெரும் பாதிப்பு உலகளவில் வருமென்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
கோவிட் 19 தொற்று நோயின் தாக்கம் இந்த வேகத்தில் பரவும்அல்லது இப்படி ஒரு நோய் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் அறியவில்லை. இப்படி ஒரு நோய் உலகளவில் இதுவரை வந்தது இல்லை எம்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி ஒரு தாக்கம்! அப்படி ஒரு வேகம்!
தோழிற் துறையில் உள்ளவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பொது மக்கள் வெளியே போகப் பயப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில் நமது இந்திய நிறுவனங்கள் என்ன நிலைமையில் இருக்கின்றன என்று பார்ப்போம்.
இதில் பெரும் பாதிப்பு என்பது சுற்றுலாத்துறை தான். இதில் பல இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியா செல்லுபவர்கள் பலரும் இந்திய நிறுவனங்களைத் தான் நாடுகின்றனர். அவர்களுக்குத் தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அதுவும் அவர்கள் ஒரளவு இந்தியாவை நம்பியே, இந்தியர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இப்போது இந்தியாவும் உள்ளே நுழைய தடை விதித்திருக்கின்றது. யாரையும் குறை சொல்லுவதற்கில்லை. நாட்டு நலன் தான் முக்கியம்.
எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் சொந்தப் பஸ் வைத்துக் கொண்டு தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணிகளை ஏற்றிச் செல்பவர். அவருக்குப் பலத்த அடி. வெளி நாடுகளிலிருந்து பயணிகள் வருவதில்லை. அதனால் தொழில் பாதிப்பு.
நமது உணவகங்கள் பெரும் பாதிப்படைந்திருக்கின்றன. இப்போது நமது இந்திய உணவகங்களும் சிரமத்தை எதிர் நோக்குகின்ற நேரம். இந்த வியாதி எங்கிருந்து தொற்றுமோ என்று யாருக்கும் தெரியாது. எங்கிருந்தும் தொற்றலாம் என்பது தான் அதன் வரலாறு. உணவகங்களிலிருந்தும் வரலாம். ஏற்கனவே இந்த உணவகங்கள் 'சுத்தத்திற்கு' பேர் போனவர்கள்! இபோது மட்டும் திருந்திருக்கவாப் போகிறார்கள்!
இப்போது நமக்குத் தெரிந்த வரை இந்திய உணவகங்களுகும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்களே அந்தப் பக்கம் இப்போதெல்லாம் எட்டிப் பார்ப்பதில்லை!
மளிகைக் கடைகளிலும் கூட்டங்கள் குறைந்திருக்கின்றன. அத்தியாவசிய பொருள்களை மட்டும் மக்கள் வாங்குகின்றனர். எனது பக்கத்தில் ஒரு மளிகைக்கடை. கூட்டம் எப்போதும் குவிந்திருக்கும். இப்போது கூட்டம் எங்கே போனது என்றே தெரியவில்லை!
வணிகம் செய்வோர் இந்த கொரானா தொற்று நோயை மறக்கவே கூடாது. நமக்கு ஒரு சரியான பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது தான் அந்த பாடம்.
நல்ல காலத்தில் நாலு காசு சம்பாதிக்கணும். கெட்ட காலத்தில் அதனை பயன படுத்த வேண்டும்!
இந்த கோவிட் 18 நாம் அனைவருக்கும் கடுமையான பாடம்! படிப்போம்!

Thursday, 12 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (69)
அரசாங்க கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள்
இப்போது நமது மாணவர்களில் பலர் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்பது நல்ல செய்தி. அரசாங்க கல்லூரிகளில் சேரப் போகும் மாணவர்களை தனியார் கல்லூரிகள் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வது கெட்ட செய்தி.
தனியார் கல்லூரிகளைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்கள் மாணவர்களுக்கு அரசாங்கக் கல்வி கடன் கிடைக்கும்வரை தேனொழுகப் பேசுவார்கள். கடன் கிடைத்த அடுத்த நாளே "உனக்கு விருப்பம் இல்லையென்றால் நீ போகலாம்!" என்பார்கள்! காரணம் மாணவர்கள் வாங்கிய கடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தலைமேலே தொங்கிக் கொண்டிருக்கும். அந்தக் கடனை மாணவர்கள் தான் கட்ட வேண்டும். படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி அது அவர்களுடைய கடன். அவர்கள் தான் கட்ட வேண்டும்.
இன்றைய நிலையில் நமது இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக பல இலட்சம் வெள்ளிகளை அரசாங்கத்திறகு, படிக்காத கல்விக்காக, கடன் கட்ட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். காரணம் இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் அவர்களைக் கடனகாரர்களாக ஆக்கி வைத்திருக்கின்றன.
அரசாங்கக் கல்லூரிகளில் நிறையவே இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த இடங்களை நாம் பயன்படுத்திக் கொண்டாலே போதும். நமக்குத் தனியார் கல்லூரிகளின் தயவு தேவை இல்லை. மாணவர்கள் கடகாரர்களாக ஆக வேண்டியதும் இல்லை!
நம் மாணவர்களிடையே அல்லது பெற்றோர்களிடையே ஒரு பெரிய குறைபாடு உண்டு. நம் பிள்ளைகள் நமது பக்கத்து அறையை விட்டு எங்கும் வெளியே போகக் கூடாது. போனால் கெட்டுப் போவார்கள் என்கிற மனோபாவம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மாணவர்கள் வெளியூர்களில் போய் படிக்கிறார்கள். ந்மது பெண்கள் கூட சபா, சரவாக் போன்ற தூரத்து மாநிலங்களில் போய் படிக்கின்ற காலம் இது. ஆனால் இவர்கள் "கெட்டுப்போவார்கள்" என்கிற எண்ணம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை! அதுவும் ஆண் பிள்ளைகள்!
இப்போது பத்திரிக்கைகளிலே வருகின்ற 'அடிதடி' செய்திகளெல்லாம் வெளியூர்களிலிருந்தா வருகின்றன? எல்லாம் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் தானே ஈடுபடுகிறார்கள்!
இன்னோன்றையும் நாம் குறிப்பிட வேண்டும். இடைநிலைப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள், தங்களோடு படித்த நண்பர்கள், தொடர்ந்து தங்களோடு கல்லூரிகளுக்கும் படிக்க வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது சாத்தியமில்லை. மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு தான் அவர்கள் போக வேண்டும்.
இங்கு தான் அவர்களுக்கு தனியார் பள்ளிகள் அடைக்கலம் கொடுக்கின்றன! முன்பு இடைநிலைப்பள்ளியில் படித்த அதே மாணவர்களோடு படிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை கடன்காரார்களாக மாற்றுகின்றனர்.
எது எப்படியோ நமது பெற்றோர்கள் கண்டிப்பாக இல்லாவிட்டால் அவர்கள் கண் முன்னாலேயே பிள்ளைகள் கடன்காரர்களாவதைப் பார்ப்பார்கள்!
மாணவர்களே! உங்கள் எதிர்காலம் முக்கியம். நல்ல முடிவாக எடுங்கள். உங்கள் கல்வியை முடித்ததும் நீங்கள் மீண்டும் உங்கள் நண்பர்களோடு சேரலாம். உங்கள் பெற்றோர்களுக்குப் பணச் சுமையை ஏற்படுத்தாதீர்கள்.

Wednesday, 11 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (68)
ஒரு தலைமுறை போதும்!
நமது முன்னோர்கள் ஒரு சில தவறுகளைச் செய்தார்கள். அது அவர்களோடு போயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள்
செய்த தவறுகளிலேயே பெரிய தவறு தங்களது தவறுகளை அவர்களின் வாரிசுகளுக்கும் தொடர வைத்தார்கள் என்பதுதான்!
ஆமாம் நாம் குடிகார சமூகமாக எப்போது மாறினோம்? நமது முதல் சந்ததி இங்கு வந்த போது வேலையின் சுமை காரணமாக குடிக்க ஆரம்பித்தார்கள். இதனை வெள்ளைக்காரன் கண்டான். "இவன் எங்கும் ஓடிவிடாமல் இருக்க வேண்டுமே!" என்கிற கவலையினால் ஒவ்வொரு தோட்டத்திலும் கள்ளுக்கடைகளை ஆராம்பித்தான். நாம் என்ன செய்தோம்? நமது பிள்ளைகளையும் குடிக்க வைத்து அழகு பார்த்தோம்!
அன்று ஆரம்பித்தது தான்! இந்த குடிகார ஓட்டம்! இன்று வரை இந்த ஓட்டம் ஓயவில்லை! வேகம் குறையவில்லை!
இன்று நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. குடியிலிருந்து நாம் மீள முடியுமா என்பதும் தெரியவில்லை.
குடிகார சமூகம் தான் இன்றும் அதிகமான தொழிலாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வாரிசுகளையும் குடிக்க வைப்பதையு,ம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
நான் சொல்ல வருவது ஒரே ஒரு விஷயம் தான். நீங்கள் குடிகாரர் தான். முடிந்தால் குடிப்பதை வீட்டோடு கொஞ்சம் கௌரவமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் பிள்ளைகளின் முன்னால் குடிக்காதீர்கள். இனி உங்கள் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். இந்த குடிகாரன் என்னும் பட்டம் உங்கள் தலைமுறையோடு போகட்டும். அடுத்த தலைமுறையாவது சிறப்பாக வாழவேண்டும்.
இனி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு முடிவு எடுங்கள். அரசியல்வாதிகளின் பின்னால் அலையாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில். அரசியல்வாதிகளின் கையில் அல்ல. உங்களுக்குத் தேவையான விபரங்களை ஆசிரியர்களிடம் விசாரியுங்கள்.
நீங்கள் தொழிலாளி என்கிற அந்த முத்திரையை இனி உங்கள் பிள்ளைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டாம். வங்காள தேசத்திலிருந்து வந்தவன் பிள்ளைகள் எல்லாம் நாட்டை ஆளுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அடிமையாக இருக்கப் போகிறோம்?
அடிமைத்தனத்தை உடைத்தெறியுங்கள். அந்த "தொழிலாளி" என்னும் வட்டத்திலிருந்து வெளியாகுங்கள்.
நீங்கள் தொழிலாளி என்றால் உங்களோடு அந்த தலைமுறை கடைசியாக இருக்கட்டும். அடுத்த உங்களது வாரிசுகள் டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக, என்ஜினியர்களாக, பைலட்டாக, காவல்துறை அதிகாரிகளாக, அமைச்சர்களாக வர வேண்டும்.
அந்த முன்னேற்றத்தையே நீங்களும் இலட்சியமாகக் கொள்ளுங்கள். நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளுக்குத் தூண்டுகோளாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் இருந்தால் பிள்ளைகளின் முன்னேற்றம் வெற்றிகரமாக அமையும். அதில் சந்தேகமில்லை.
தொழிலாளி என்கிற அந்த முத்திரை ஒரு தலைமுறைக்கு மட்டும் போதும். பிள்ளைகளுக்குச் சரியான கல்வியைக் கொடுத்தால் அடுத்த தலைமுறை படித்த தலைமுறையாக உருவாகிவிடும்.
தொழிலாளப் பெற்றோர்களே அடுத்த தலைமுறையை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லுவது உங்கள் கையில் மட்டும் தான் இருக்கிறது. யார் யார் கையிலோ இல்லை!
வாழ்வது ஒரு முறை. அதை வெறும் தொழிலாளியாக, குடிகாரனாகவா வாழ வேண்டும்? முதல் தலைமுறைக்கு எந்த வசதியும் இல்லை அதனால் அவர்கள் வாழ்க்கை அப்படி அமைந்தது. ஆனால் அடுத்த தலைமுறை உயர்ந்தல்லவா இருக்க வேண்டும். அந்த கடமையை நாம் ஒழுங்காக செய்யவில்லை. அதனால் தான் நமது நிலைமை படு பாதாளத்திற்குச் சென்று விட்டது. பலர் மீண்டு விட்டனர். இன்னும் பலர் "முடியவே முடியாது!" என்று தமிழர்கள் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மாறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
அடுத்த தலைமுறை உயரும்! உயரும்! உயரும்

Tuesday, 10 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (67)
நாம் மாற வேண்டும்!
நண்பர்களே! நாம் மாறாதவரை எதுவும் மாறப்போவதில்லை.
நம் நாட்டின் மூன்றாவது பெரிய இனம் நமது இனம். ஆனாலும் சீனர்கள் தான் நம் நாட்டின் பொருளாதாரத்தை தங்களது கைக்குள் வைத்திருக்கிறார்கள். மலாய்க்காரர்கள் அவர்களது கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் இன்று பெரிய அளவில் வளர்ந்து விட்டார்கள்.
மூன்றாவது பெரிய இனமான நாம்...? இந்நாட்டின் கல்வித்துறையை வளர்த்தவர்கள் நாம். இந்நாட்டின் பொருளாதாரத்தின் வேராக இருந்தவர்கள் நாம். சீனர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் தான் வங்கிகளாக இருந்து செயல்பட்டோம். ஆனால் இன்று? ஆசிரியர்களாக இருக்கக் கூட தகுதியில்லாதவர்களாக புறக்கணிக்கப்படுகிறோம். சீனர்களின் வங்கிகள் நமக்குக் கடன் கொடுப்பதில்லை. ஏன்? அரசாங்கம் நமக்காக ஆரம்பித்த "செடிக்" ஆகட்டும் அல்லது இன்றைய "மித்ரா" ஆகட்டும் - அவர்கள் கூட நம்மை திரும்பிப் பார்ப்பதில்லை!
ஆக நாம் அனைவராலும் புறக்கணிக்கப்படுகின்றோம். ஆட்சியில் உள்ள தமிழனே நம்மை எட்டி உதைக்கிறான்!என்ன காரணமாக இருக்கும்?
ஆம் நாம் மாற வேண்டும். நமக்கு ஆட்டு மந்தை புத்தி அதிகம். எவன் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுகிறோம். அதனையே வேத வாக்காக எடுத்துக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒர் அயோக்கியன் என்பதை மறந்துவிட்டு அவன் சொல்லுவதைத் தான் கேட்கிறோம்.
நாம் சிந்திக்கும் பழக்கத்தை இழந்துவிட்டதற்குக் காரணமே நம் அரசியல்வாதிகள் தான். ஒவ்வொரு விஷயத்திற்கும் அவன் பின்னாலேயே நிற்பதால் இப்போது யார் சொல்லாமலே நாமே பின்னாலே போய் நிற்கிறோம்!
நாம் மாற வேண்டும். நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பெரிது பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும் ஒரு சில விஷயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.. அதில் முதன்மையானது நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். பட்டதாரிகளாக ஆக்க வேண்டும். கல்வி மட்டும்தான் நமக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.
நாம் எந்த சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வி தான் அவர்களைக் கைத்தூக்கி விட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
யாழ்ப்பாணத் தமிழர்கள் இங்கு வரும் போது அவர்கள் ஏழைகள் தான். ஓரளவு கல்வி கற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்த கல்வி தான் அவர்களை இன்று உயர்த்தியிருக்கிறது. கேரள மலையாளிகள் ஓரளவு கல்வி அறிவுடன் வந்து தோட்டப்புறங்களில் வேலை செய்தனர். அங்கிருந்து தான் அவர்களுக்கு அபரிதமான வளர்ச்சி ஏற்பட்டது. தோட்டப் பாட்டாளிகளாக வேலை செய்த மலையாளிகள் கூட தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டியதால் தான் இன்றும் கூட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களாக இன்னும் மலையாளிகளே இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் முதல் தலைமுறை மட்டும் தான் தோட்டப் பாட்டாளிகளாக வேலை செய்தார்கள். அடுத்த தலைமுறை ஆசிரியர்களாக மாறிவிட்டனர்.
தமிழர்களின் நிலை என்ன? மூன்று, நான்கு தலைமுறை என்று தோட்டங்களில் கொட்டை போட்டவர்கள் தமிழர்கள் மட்டும் தான்! மற்றவர்கள் தங்களது முன்னேற்றத்தில் அக்கறை காட்டிய போது நாம் மட்டும் தான் "தண்ணி" அடிப்பதில் அக்கறை காட்டினோம். இப்போதும் கூட நமது பிள்ளைகளின் கல்வியை விட நமக்கு "தண்ணி" அடிப்பது தான் முன்னுக்கு நிற்கிறது! தோட்டத்தை விட்டு வெளியேறினாலும் "தண்ணி" யிலிருந்து மட்டும் நாம் வெளியேறவில்லை!
நாம் "தண்ணி" அடிப்பதிலிருந்து விடுபடாதவரை மற்றவர்களுக்கு நாம் அடிமையாகத்தான் வாழ வேண்டும். நாம் முன்னேறவில்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் நாம் மலையாளிகளை விட, தெலுங்கர்களை விட, சீக்கியர்களை விட, யாழ்ப்பாணத் தமிழர்களை விட இன்னும் அவர்கள் பின்னால் தான் நின்று கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் தாம் முன்னணியில் நிற்க வேண்டும்.
நாம் தான் முன்னணியில் நிற்க வேண்டும் என்கிற - அதனை நோக்கித்தான் நமது பயணம் இருக்க வேண்டும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
நாம் மாறுகிறோம்! இன்னும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்!

Sunday, 8 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (66)
நான் நானாக இருக்க விரும்புகிறேன்!
மேலே சொன்னது நானல்ல. எஸ்.பி.எம். தேர்வில் 11A பெற்ற ஒரு மாணவன் சொன்ன வார்த்தை அது.
அந்த மாணவனுக்கு நன்றி. இப்போதெல்லாம் நமது இளைஞர்களிடம் உங்கள் இலட்சியம் என்ன கேட்டால் "தல க்கி பாலாபிஷேகம் செய்வதும், தளபதி க்கு பாலாபிஷேகம் செய்வதும், சுப்பர் ஸ்டாருக்கு பாலாபிஷேகம் செய்வது தான் எங்களது இலட்சியம்" என்கிறார்கள்!
இப்படிப்பட்ட ஒரு நிலையில் அந்த மாணவன் மட்டும் அல்ல இந்த தலைமுறையைச் செர்ந்த ஒவ்வொரு மாணவனும்,ஒவ்வொரு இளைஞனும் "நான் நானாக இருக்க விரும்புகிறேன்" என்று சொன்னால் அதனை வரவேற்காமல் எப்படி வாய் மூடி இருக்க முடியும்?
மீண்டும் பாராட்டுகிறேன். நான் நானாக இருக்க விரும்புகிறேன் என்கிற சொல் இப்போதெல்லாம் அடிக்கடி சொல்லப்படுகின்ற ஒரு சொல்லாக நம்மால் கேட்க முடிகிறது. ஓரளவு நமது திரைப்படங்களும் நமது இளைஞர்களின் மனதை மாற்றியிருக்கின்றன என்றும் சொல்லலாம்.
வாழ்க்கையில் முன்னேற மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஏதோ இரண்டே இரண்டு துறைகள் தான் இருக்கின்றன என்கிற எண்ணத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். ஒரு மருத்துவரோ அல்லது ஒரு வழக்கறிஞரோ - இதைத் தவிர வேறோன்றுமில்லை என்கிற எண்ணம் வேண்டாம். இவை இரண்டும் தான் அடிக்கடி காதில் விழுகின்ற அல்லது நமக்குத் தெரிந்த ஒரு கல்வி என எண்ணுகிறோம். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போதே இவர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள்!
எல்லாவற்றையும் விட மாணவர்களே அவர்களுக்கு வேண்டிய துறையை அவர்களே தேர்ந்தெடுக்கெட்டும். கணக்கியல் துறையைத் நாம் தேர்ந்தெடுக்காததே நமது பலவீனத்தைக் காட்டுகிறது. வர்த்தகத் துறைக்கு கணக்கியல் துறையினர் முக்கிய பங்காற்றுகின்றனர். கணக்கியல், மருந்தியல் துறை, கட்டிடக்கலை, காவல்துறை, விமான ஓட்டுனர், கப்பற்படை, இராணுவம் இப்படி இன்னும் பல பல!
இப்படி எத்தனையோ வாய்ப்புக்கள் இருக்கையில் மாணவர்களைச் சிந்திக்க விடாமல் செய்கின்றனர் பெற்றோர்கள்.
பெற்றோர்களே! பிள்ளைகளை சிந்திக்க விடுங்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். எதனையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள்.
இதோ மேலே சொன்னானே அந்த மாணவன் அவனைப் போல உங்கள் பிள்ளைகளையும் சிந்திக்க விடுங்கள். இந்த வயதில் அவனைச் சிந்திக்க விடாமல் செய்தீரகளானால் அவன் வாழ்நாளெல்லாம் உங்களை சந்தி சிரிக்க வைப்பான்! சிந்திக்க தெரியாதவன் அப்படித் தான் செய்ய முடியும்!
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்!

Friday, 6 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (65)
வெற்றி பெறாத மாணவர்களுக்கு ........
எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள், வெற்றி பெற்ற இந்திய மாணவர்களுக்கு வாழ்த்துகள் நாடெங்கிலும் குவிகின்றன. மிகப் பலர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். மனம் குளிர்கிறது. மீண்டும் வாழ்த்துகள்!
வெற்றி பெறாத மாணவர்களும் நம்மிடையே பலர் இருக்கின்றனர். அவர்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை நமது அரசாங்கம் வழங்கியிருக்கிறது.
தொழிற்கல்வி என்கிற போது நமது இந்திய மாணவர்கள் பலர் தயங்குகின்றனர். தயக்கம் என்னும் போது கல்வி பயிலுவதில் தயக்கம் இல்லை. தன்னோடு படித்த தனது இணைபிரியாக் கூட்டாளிகளை விட்டு எப்படிப் பிரிவது என்பதில் தால் பெரும்பாலான மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்!
தொழிற்கல்வி படித்தாலும் நீங்கள் பல்கலைக்கழகம் போகும் அளவுக்கு உங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது. ஒரு வேளை உங்கள் நண்பர்களை விட்டுப் பிரிந்தால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையலாம்!
தொழிற்கல்வியைப் பற்றி குறைத்து மதிப்பிடாதீர்கள். பெற்றோர்களும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனக்குத் தெரிந்து, சமீபத்தில் "பயிற்சி" க்கு வந்த இரண்டு மாணவிகள் பலகலைக்கழகம் போக வாய்ப்புக் கிடைத்தது. இருவருமே தொழில் நுட்பக் கல்லூரியில் படித்தவர்கள். அதில் ஒருவர் இந்திய மாணவி. அவர் அந்தக் கல்லூரியிலேயே சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குடும்பச் சூழல் காரணமாக அவரால் போக முடியவில்லை. பிறகு அவர் போகலாம்.அதனால் வாய்ப்புக்கள் இருக்கின்றன. நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறை சொல்லுவதில் நேரத்தைக் கழிக்க வேண்டாம்.
எலக்டிரிக் துறையில் தொழிற்கல்வி பயின்ற ஒரு நண்பரை எனக்குத் தெரியும். இப்போது அவர் பெரிய வர்த்தகர் ஆகி விட்டார். பல பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவற்றிற்கு அவ்ருடைய நிறுவனம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
குளிர்சாதனப் பெட்டி பழுது பார்க்கும் ஒர் ஆறு மாத பயிற்சியில் கலந்து கொண்ட ஒரு நண்பரை எனக்குத் தெரியும். கல்வியில் தோற்றுப் போனவர் அவர். அந்த பயிற்சிக்குப் பின்னர் கொஞ்ச காலம் அனுபவம் பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்தார். ஒரு சில ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் உயர்ந்து விட்டார். சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பின்னர் நிர்வாகியாக பணியாற்றினார்.
ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் முறையான கல்வி கிடைத்தால் நல்லது அது இல்லை என்றால் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். மாற்று வழி என்றால் அது தொழிற்கல்வி தான். அதுவும் அரசாங்க கல்விக் கூடங்கள். அதிகச் செலவு இல்லாத அரசாங்கக் கல்லூரிகளில் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
நீங்கள் பரிட்சையில் தோல்வி என்று தெரிந்தால் ஒரு சில வல்லூறுகள் உங்களைச் சுற்றி கொண்டே இருக்கும். உங்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளிக் கொடுக்கும். இப்போது நீங்கள் அதற்கு மயங்கினீர்களானால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் ஓர் அடிமையாகவே வாழ வேண்டி வரும். எந்த ஒரு பயிற்சியும் இல்லாத வாழ்க்கை உங்களை அடிமையாக்கிவிடும். இந்த உலகமே உங்களைப் பார்த்துச் சிரிக்கும்.
வாழ வேண்டும். வளர வேண்டும். உயர வேண்டும். உயரே உயரே பறக்க வேண்டும். அதற்கு.....? கல்வி தேவை. ஏதோ ஒரு கல்வியாக இருக்கலாம். ஆனால் கல்வி தேவை. அதில் எந்த சமரசமும் இல்லை!

Thursday, 5 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (64)
இன்றைய அட்டவணை என்ன?
ஆமாம், இன்று நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற திட்டங்கள் இருக்கின்றனவா? அதாவது இன்றைய அட்டவணையைத் தயாரித்து விட்டீர்களா?
இதற்க்கெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் செலவாகப் போவதில்லை. காலையில் அலுவலகத்தில் உட்கார்ந்ததும் முதல் வேலையாக "இன்றைய வேலை என்ன?" என்று ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். வேலைகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்து எது முதலில், இரண்டாவது எது ஆகக் கடைசி என்பதாக ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டால் நமது வேலைகளைச் செய்வது எளிதாக இருக்கும். வேலைகள் சுமையாகத் தெரியாது.
இதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், பரவாயில்லை, முயற்சி செய்யுங்கள்.
ஒன்றுமே இல்லாமல், எந்தத் திட்டமும் இல்லாமல், நாம் ஒரு நாளை ஆரம்பிப்பது என்பது நாம் என்ன செய்கிறோம், இன்றைய தினம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. ஏதோ குருட்டுத் தனமாக இன்றைய பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது.
எல்லாவற்றுக்குமே ஒரு திட்டம் வேண்டும். வெளிநாடு பயணம் செய்கிறோம் என்றால் சும்மா ஒரு திட்டமும் இல்லாமல் போய் விட முடியுமா? திட்டம் இல்லாமல் போனால் எவ்வளவு பணம் கொண்டு போனாலும் அது பற்றாமல் போகும்! அப்புறம் நடு ரோட்டில் நிற்க வேண்டி வரும்!
அப்படித்தான் இதுவும். எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அன்றாடப் பணியில் ஏதேனும் மாற்றங்கள் வரலாம். அப்படி வந்தால் நமது வேலைகள் தடைபடலாம். குறைந்தபட்சம் நாம் சில திட்டங்களை வைத்துக் கொண்டு வேலைகளைச் செய்யும் போது "எப்படியோ! ஏதோ சில முக்கியமான வேலைகளையாவது செய்து முடித்தோமே!" என்கிற மன நிம்மதியாவது ஏற்படும்!
அதற்குத் தான் அன்றாடப் பணிகளில் கூட நாம் சில திட்டங்களை வைத்துக் கொண்டு தான் செயல்பட வேண்டும். அது அட்டவணையாக இருக்கலாம் அல்லது திட்டங்களாக இருக்கலாம்.
எந்த திட்டமும் இல்லாமல், ஒரு வழிகாட்டல் இல்லாமல், ஒரு அட்டவணை இல்லாமல் நாம் செயல்பட்டால் "நமது இன்றைய சாதனை?" என்பது நமக்கே தெரியாது! வேலைகளின் சுமையை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளுகிறோம்!
அதனால் நீங்கள் அலுவலகத்தில் பணி புரிபவராக இருந்தாலும் சரி, வியாபாரத்தில் ஈடுப்ட்டிருப்பவராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, நாம் அன்றாட வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் அன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியிலிட்டு நமது வேலைகளை ஆரம்பிப்பதே நமக்கு வெற்றிகளைக் கொண்டு வரும்!
வெற்றி பெற வாழ்த்துகள்!

Wednesday, 4 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (63)
உயிர் வாழ வேலை செய்ய வேண்டும்
டாக்டர் மகாதிரின் அரசியல் பற்றி நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது பற்றி நாம் பேசப் போவதில்லை.
அவர் பதவி இழந்த மறு நாளே தனது அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை: "நீங்கள் உய்ரோடு இருப்பதற்கு கட்டாயம் வேலை செய்ய வேண்டும். நீங்கள் தூங்கினால் மரணம் அடைவீர்கள்."
இப்போது அவருக்கு 95 வயது ஆகிறது. இருக்கும் வரையில், உயிர் வாழ, வேலை செய்ய வேண்டும் என்கிற அவரது கொள்கையை நாமும் பின்பற்றலாம். அவருடைய வயதில் அவர் தூங்கினாரானால் மீண்டும் எழுந்திருப்பாரா என்பதில் எந்த உறுதியும் இல்லை.
ஆனால் அவரை விட வயதில் குறைந்தவர்கள் தூங்கிக் காலத்தைக் கழிக்கிறார்கள் என்பது தான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலே போதும் ஒரு சிலர் "சம்பாதித்தது போதும்" என்று சுருண்டு படுத்து விடுகின்றனர்!
இவர்களுக்கு நான் ஒன்று சொல்லுகிறேன். நாம் டாக்டர் மகாதிரின் வயதோடு ஒப்பிடும் போது நமக்கு அப்படி என்ன வயதாகி விட்டது?
என்னைப் பொறுத்தவரை நாம் உயிரோடு இருக்கும் வரை உழைக்க வேண்டும் ஒவ்வொரு நிமிடமும் நேரத்தைச் சரியான வழியில் செலவழிக்க வேண்டும். நாம் வாழும் இந்த பூமிக்குப் பாரமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்,
நாம் வேலை செய்வதன் மூலம் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நமக்கே புரியும். மற்றவர்களும் புரிந்து கொள்ளுவார்கள்.
வேலை செய்வதுஉயிர் வாழ மட்டும் அல்ல
ஒன்றை மட்டும் நான் சொல்லுவேன். இருக்கும் வரை நாம் போராட வேண்டும். போராட்டம் தான் வாழ்க்கை என்றாகிய பிறகு கடைசி காலம் வரை போராட்டம் தான். போராட்டம் என்கிற போது ஏதோ நடுவீதி போராட்டம் என்கிற நினைப்பெல்லாம் வேண்டாம். இருந்த இடத்தில் இருந்து கொண்டு கூட போராடலாம். நல்லதுக்காக போராடலாம். நாட்டுக்காக போராடலாம். அமைதி வழியில் போராடலாம். உங்கள் கருத்தைச் சொல்லுவது கூட போராட்டம் தான். போராட்டம் எனறதும் ஏதோ சண்டை போடுவது அல்ல. ஒரு சில விஷயங்களில் நமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
வயதாகி விட்டது என்பதற்காக ஒரு மூலையில் முடங்கிவிட முடியாது. அதிக வயது அதிக அனுபவம். நமது அனுபவங்கள் வருங்கால தலைமுறைக்குத் தேவை. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் வாழ வேண்டும்.
வேலை செய்வதன் மூலம் தான் நாம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
வாழுங்கள்! கடைசி நிமிடம் வரை வாழுங்கள்! உயிர் வாழுங்கள்! உயிரோடு வாழுங்கள்!

Tuesday, 3 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (62)
உங்கள் ஆளுமையைக் கவனியுங்கள்
ஆளுமை என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும் ஆங்கிலத்தில் Persanality என்பதை தமிழிலே ஆளுமை என்கிறோம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆளுமை என்பது முக்கியம். மிக எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு முன்னாள் போலீஸ்காரரைப் பாருங்கள் அல்லது முன்னாள் இராணுவ வீரரைப் பாருங்கள் அல்லது அரசாங்கத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியைப் பாருங்கள் - இவர்கள் அனைவரிடமும் அவர்களின் நடைஉடை பாவனைகளில், அவர்கள் உடுத்தும் உடைகளில் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருக்கும்.
நாம் அவர்களைப் பார்க்கும் போதே அவர்கள் மீது நமக்கு ஒரு மரியாதை ஏற்படும். மேலே குறிப்பிட்டவர்கள் அனைவருமே ஒரு கட்டாயத்தின் பேரில் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். அது கட்டாயத்தின் பேரில் தான் என்றாலும்அந்த ஆளுமை தான் அவர்கள் மீது மக்களிடம் மரியாதையை ஏற்படுத்தும்.
இப்போது நான் சொல்ல வருவது எல்லாம் நாம் அனைவருமே அந்த கட்டொழுங்கோ அல்லது ஆளுமையையோ பெற்றிருக்க வேண்டும் என்பது தான்.
நம்மைப் பார்க்கும் போது மற்றவர்களுக்கு நம் மீது ஒரு மரியாதை ஏற்பட வேண்டும். அது தான் ஆளுமை. நமது தாமான்களிலே பாருங்கள். மலாய்க்காரர் ஒருவர் தனது வீட்டிலிருந்து கடைத்தெருவுக்கு வந்தால் அவர் எப்படி உடுத்திக் கொண்டு வருகிறார். ஏதோ வெளி நாடு போகிறவர் போல வருவார். நம்மையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அது கூட பரவாயில்லை. ஓர் அரசாங்க அலுவலகத்திற்குப் போனால் அங்குள்ளவர்கள் ஏன் நமக்கு மரியாதை கொடுப்பதில்லை? அல்லது ஏதாவது அலுவலகங்களுக்குப் போனால் ஏன் நம்மைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.
நம்மிடம் அந்த ஆளுமையில்லை என்பதால் தானே. குறைந்தபட்சம் ஒரு பெரிய மனிதரைப் போலாவது ந்மது தோற்றம் இருக்க வேண்டும். நாம் எல்லாருமே அழகை விரும்புகிறோம். அழகாக இருப்பவர்களை விரும்புகிறோம்.வசீகரம் நிறைந்தவர்களை விரும்புகிறோம். நமது அழகு தோற்றம் தான் மற்றவர்களின் பார்வை நம்மீது விழக்காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
கம்பிரமாக உடை உடுத்துவது , வசீகரமான பார்வை - இவை அனைத்தும் நமக்கு அதிகப் பலத்தைத் தருகின்றன. உற்சாகத்தைத் தருகின்றன. "நாம் யாருக்கும் குறைந்தவர் இல்லை" என்கிற துணிவைத் தருகின்றன. அத் தான் ஆளுமையின் சக்தி.
ஆள் பாதி ஆடை பாதி என்பதெல்லாம் உண்மை தான். மற்றவரகள் மதிக்க, காரியங்களைச் சாதிக்க ஆளுமை என்பது தேவை.
உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மதிப்பது என்பது ஒரு பக்கம் இருக்க, நம்மை நாமே மதிக்கிறோம் என்கிற அந்த உணர்வும் நமக்கு ஏறபட ஆளுமை மிக மிக அவசியம்.

Sunday, 1 March 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (61)
விற்பனைத்துறை உங்களை வாழவைக்கும்
மனிதன் வாழ, சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் விற்பனைத்துறை.
இன்று யார் வியாரத் துறையில் இறங்கினாலும் அவர்களுக்கு விற்பனைத் திறன் இருக்க வேண்டும். விற்பனைத் திறன் இல்லாதவர்கள் அந்தத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது விற்பனைத் துறையில் திறமையானவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும்.
இன்று பல நிறுவனங்கள் தலை நிமிர முடிகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் விற்பனையாளர்கள். குறிப்பாக சிறு நிறுவனங்களுக்கு நல்ல விற்பனையாள்ர்கள் இல்ல என்றால் அவர்களது வியாபாரம் படுத்துவிடும்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் திறமையான விற்பனையாளர். இப்போது சொந்தமாகவே எலக்ட்ரிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை வைத்திருக்கிறார். வெற்றிகரமான வியாபாரம். மேலும் தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்.
திறமையான விற்பனையாளர்களுக்கு எல்லாக் காலங்களிலும் அவர்களின் திறமைக்கு மதிப்புண்டு.
ஒரு சில விற்பனையாளர்கள் தங்களுக்கு மாத சம்பளம் தேவையில்லை கமிஷன் கொடுத்தாலே போதும் என்று கேட்பவர்களும் உண்டு. அவர்களின் நோக்கம் என்ன? மாத சம்பளம் என்றால் கமிஷனில் கை வைப்பார்கள். அதனால் கமிஷனே போதும் என்பது தான் அவர்களது நோக்கம். கமிஷனுக்கு எல்லையில்லை அதனால் தான் ஒரு சில விற்பனையாளர்கள் நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வாழ முடிகிறது.
இப்போதே நமது இளைஞர்களில் பலர் விற்பனைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேரடித் தொழிலில் இன்று பலர் வெற்றி நடை போடுகிறார்கள். நேரடித் தொழிலைத் தவிர்த்து சிறு சிறு வியாபார நிலையங்களுக்கும் விற்பனையாளர்களின் திறன் மிகவும் தேவைப்படுகிறது. சேலைகளை விற்பனை செய்யும் விற்பனையாளன் கொஞ்சம் சொதப்பினால் கூட அந்த விற்பனை பறிபோய்விடும்.
ஒவ்வொரு சிறு தொழில்களிலும் விற்பனைச் சரிவுகளுக்குக் காரணமானவர்கள் விற்பனையாளர்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.
விற்பனை என்பது பல துறைகளைச் சார்ந்தது. விற்பனை நம்மை என்றுமே வாழ வைக்கும்!

Subscribe to:
Posts (Atom)