உயிர் வாழ வேலை செய்ய வேண்டும்
டாக்டர் மகாதிரின் அரசியல் பற்றி நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது பற்றி நாம் பேசப் போவதில்லை.
அவர் பதவி இழந்த மறு நாளே தனது அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை: "நீங்கள் உய்ரோடு இருப்பதற்கு கட்டாயம் வேலை செய்ய வேண்டும். நீங்கள் தூங்கினால் மரணம் அடைவீர்கள்."
இப்போது அவருக்கு 95 வயது ஆகிறது. இருக்கும் வரையில், உயிர் வாழ, வேலை செய்ய வேண்டும் என்கிற அவரது கொள்கையை நாமும் பின்பற்றலாம். அவருடைய வயதில் அவர் தூங்கினாரானால் மீண்டும் எழுந்திருப்பாரா என்பதில் எந்த உறுதியும் இல்லை.
ஆனால் அவரை விட வயதில் குறைந்தவர்கள் தூங்கிக் காலத்தைக் கழிக்கிறார்கள் என்பது தான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலே போதும் ஒரு சிலர் "சம்பாதித்தது போதும்" என்று சுருண்டு படுத்து விடுகின்றனர்!
இவர்களுக்கு நான் ஒன்று சொல்லுகிறேன். நாம் டாக்டர் மகாதிரின் வயதோடு ஒப்பிடும் போது நமக்கு அப்படி என்ன வயதாகி விட்டது?
என்னைப் பொறுத்தவரை நாம் உயிரோடு இருக்கும் வரை உழைக்க வேண்டும் ஒவ்வொரு நிமிடமும் நேரத்தைச் சரியான வழியில் செலவழிக்க வேண்டும். நாம் வாழும் இந்த பூமிக்குப் பாரமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்,
நாம் வேலை செய்வதன் மூலம் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நமக்கே புரியும். மற்றவர்களும் புரிந்து கொள்ளுவார்கள்.
வேலை செய்வதுஉயிர் வாழ மட்டும் அல்ல
ஒன்றை மட்டும் நான் சொல்லுவேன். இருக்கும் வரை நாம் போராட வேண்டும். போராட்டம் தான் வாழ்க்கை என்றாகிய பிறகு கடைசி காலம் வரை போராட்டம் தான். போராட்டம் என்கிற போது ஏதோ நடுவீதி போராட்டம் என்கிற நினைப்பெல்லாம் வேண்டாம். இருந்த இடத்தில் இருந்து கொண்டு கூட போராடலாம். நல்லதுக்காக போராடலாம். நாட்டுக்காக போராடலாம். அமைதி வழியில் போராடலாம். உங்கள் கருத்தைச் சொல்லுவது கூட போராட்டம் தான். போராட்டம் எனறதும் ஏதோ சண்டை போடுவது அல்ல. ஒரு சில விஷயங்களில் நமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
வயதாகி விட்டது என்பதற்காக ஒரு மூலையில் முடங்கிவிட முடியாது. அதிக வயது அதிக அனுபவம். நமது அனுபவங்கள் வருங்கால தலைமுறைக்குத் தேவை. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் வாழ வேண்டும்.
வேலை செய்வதன் மூலம் தான் நாம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
வாழுங்கள்! கடைசி நிமிடம் வரை வாழுங்கள்! உயிர் வாழுங்கள்! உயிரோடு வாழுங்கள்!
No comments:
Post a Comment