உங்கள் ஆளுமையைக் கவனியுங்கள்
ஆளுமை என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும் ஆங்கிலத்தில் Persanality என்பதை தமிழிலே ஆளுமை என்கிறோம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆளுமை என்பது முக்கியம். மிக எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு முன்னாள் போலீஸ்காரரைப் பாருங்கள் அல்லது முன்னாள் இராணுவ வீரரைப் பாருங்கள் அல்லது அரசாங்கத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியைப் பாருங்கள் - இவர்கள் அனைவரிடமும் அவர்களின் நடைஉடை பாவனைகளில், அவர்கள் உடுத்தும் உடைகளில் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருக்கும்.
நாம் அவர்களைப் பார்க்கும் போதே அவர்கள் மீது நமக்கு ஒரு மரியாதை ஏற்படும். மேலே குறிப்பிட்டவர்கள் அனைவருமே ஒரு கட்டாயத்தின் பேரில் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். அது கட்டாயத்தின் பேரில் தான் என்றாலும்அந்த ஆளுமை தான் அவர்கள் மீது மக்களிடம் மரியாதையை ஏற்படுத்தும்.
இப்போது நான் சொல்ல வருவது எல்லாம் நாம் அனைவருமே அந்த கட்டொழுங்கோ அல்லது ஆளுமையையோ பெற்றிருக்க வேண்டும் என்பது தான்.
நம்மைப் பார்க்கும் போது மற்றவர்களுக்கு நம் மீது ஒரு மரியாதை ஏற்பட வேண்டும். அது தான் ஆளுமை. நமது தாமான்களிலே பாருங்கள். மலாய்க்காரர் ஒருவர் தனது வீட்டிலிருந்து கடைத்தெருவுக்கு வந்தால் அவர் எப்படி உடுத்திக் கொண்டு வருகிறார். ஏதோ வெளி நாடு போகிறவர் போல வருவார். நம்மையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அது கூட பரவாயில்லை. ஓர் அரசாங்க அலுவலகத்திற்குப் போனால் அங்குள்ளவர்கள் ஏன் நமக்கு மரியாதை கொடுப்பதில்லை? அல்லது ஏதாவது அலுவலகங்களுக்குப் போனால் ஏன் நம்மைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.
நம்மிடம் அந்த ஆளுமையில்லை என்பதால் தானே. குறைந்தபட்சம் ஒரு பெரிய மனிதரைப் போலாவது ந்மது தோற்றம் இருக்க வேண்டும். நாம் எல்லாருமே அழகை விரும்புகிறோம். அழகாக இருப்பவர்களை விரும்புகிறோம்.வசீகரம் நிறைந்தவர்களை விரும்புகிறோம். நமது அழகு தோற்றம் தான் மற்றவர்களின் பார்வை நம்மீது விழக்காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
கம்பிரமாக உடை உடுத்துவது , வசீகரமான பார்வை - இவை அனைத்தும் நமக்கு அதிகப் பலத்தைத் தருகின்றன. உற்சாகத்தைத் தருகின்றன. "நாம் யாருக்கும் குறைந்தவர் இல்லை" என்கிற துணிவைத் தருகின்றன. அத் தான் ஆளுமையின் சக்தி.
ஆள் பாதி ஆடை பாதி என்பதெல்லாம் உண்மை தான். மற்றவரகள் மதிக்க, காரியங்களைச் சாதிக்க ஆளுமை என்பது தேவை.
உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மதிப்பது என்பது ஒரு பக்கம் இருக்க, நம்மை நாமே மதிக்கிறோம் என்கிற அந்த உணர்வும் நமக்கு ஏறபட ஆளுமை மிக மிக அவசியம்.
No comments:
Post a Comment