அலட்சியம் அபாயத்தின் அறிகுறி
அலட்சியம் என்பது எல்லாத் துறைகளிலும் நாம் பார்க்கிறோம். அது துன்பத்தைக் கொண்டு வரும். உடனடியாக இல்லாவிட்டாலும் வெளிப்பட வேண்டிய நேரத்தில் அது வெளிப்படும்.
இப்போது நம் கண் முன்னே தெரிவது கொரோனா தொற்று நோய். ஸ்ரீபெட்டாலிங் பள்ளிவாசலில் காட்டிய அலட்சியம் இன்று நாடு முழுவதும் கொரோனா கொடிக்கட்டிப் பறக்கிறது! அரசாங்கத்தால் இன்னும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை!
இந்த அலட்சியத்தால் என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோடி கோடியாக வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை, அதனால் சம்பளம் இல்லா விடுமுறை. அத்தோடு அரசாங்க அதிகாரிகள் "எங்களை எந்த வியாதியும் ஒன்றும் செய்து விட முடியாது!" என்கிற மதமதப்பு!
இன்னும் சில தினங்களில் "இதெல்லாம் கடவுள் செயல்!" என்பதாகச் சொல்லி கடவுள் மீது விரலை நீட்டுவார்கள்!
அலட்சியம் அபாயத்தைக் கொண்டு வரும் என்பது நமக்குப் புரிகிறது. வர்த்தகத் துறையில் உள்ள நாம் இன்னும் அதிகமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலில் அலட்சியம், வாடிக்கையாளர்களிடம் அலட்சியம், கெட்டுப்போன பொருள்களை விற்று சம்பாதிப்பது, சரியான நேரத்தைக் கடைப்பிடிக்காமல் நேரத்தில் காட்டுகிற அலட்சியம் இப்படி ஒவ்வொன்றிலும் காட்டும் அலட்சியும் கடைசியில் எங்கு போய் நிற்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒன்று வியாபாரத் துறையிலிருந்து முற்றாக ஒதுக்கப்படுவோம். அல்லது நஷ்டத்தில் வியாபாரத்தை செய்து கொண்டு மற்றவர்கள் மீது பழி சொல்லிக் கொண்டிருப்போம்! . இரண்டுமே வியாபாரத்திற்கு நல்லதல்ல.
அலட்சியம் என்பது நாம் மக்களை மதிக்கவில்லை என்பது பொருள்,வர்த்தகத் துறையில் உள்ளவர்கள் மக்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் மக்களால் நாம் தான் மிதிபடுவோம்!
அலட்சியம் எதிலும் வேண்டாம்! அது நம்மை படு பாதாளத்திற்கு இட்டுச் செல்லும்!
அலட்சியம் வேண்டாம்! அது ஆபத்தின் அறிகுறி!
No comments:
Post a Comment