Sunday 1 March 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (61)

விற்பனைத்துறை உங்களை வாழவைக்கும் 

மனிதன் வாழ, சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் விற்பனைத்துறை.

இன்று யார் வியாரத் துறையில் இறங்கினாலும் அவர்களுக்கு விற்பனைத் திறன் இருக்க வேண்டும். விற்பனைத் திறன் இல்லாதவர்கள் அந்தத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது  விற்பனைத் துறையில் திறமையானவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும்.

இன்று பல நிறுவனங்கள் தலை நிமிர முடிகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் விற்பனையாளர்கள்.  குறிப்பாக சிறு நிறுவனங்களுக்கு நல்ல விற்பனையாள்ர்கள் இல்ல என்றால் அவர்களது வியாபாரம் படுத்துவிடும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் திறமையான விற்பனையாளர். இப்போது சொந்தமாகவே  எலக்ட்ரிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை வைத்திருக்கிறார். வெற்றிகரமான வியாபாரம். மேலும் தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்.

திறமையான விற்பனையாளர்களுக்கு எல்லாக் காலங்களிலும் அவர்களின் திறமைக்கு மதிப்புண்டு. 

ஒரு சில விற்பனையாளர்கள் தங்களுக்கு மாத சம்பளம் தேவையில்லை கமிஷன் கொடுத்தாலே போதும் என்று கேட்பவர்களும் உண்டு. அவர்களின் நோக்கம் என்ன? மாத சம்பளம் என்றால் கமிஷனில் கை வைப்பார்கள். அதனால் கமிஷனே போதும் என்பது தான் அவர்களது நோக்கம். கமிஷனுக்கு எல்லையில்லை அதனால் தான் ஒரு சில விற்பனையாளர்கள் நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வாழ முடிகிறது.

இப்போதே நமது இளைஞர்களில் பலர் விற்பனைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  நேரடித் தொழிலில் இன்று பலர் வெற்றி நடை போடுகிறார்கள்.  நேரடித் தொழிலைத் தவிர்த்து சிறு சிறு வியாபார நிலையங்களுக்கும் விற்பனையாளர்களின் திறன் மிகவும் தேவைப்படுகிறது. சேலைகளை விற்பனை செய்யும் விற்பனையாளன் கொஞ்சம் சொதப்பினால் கூட அந்த விற்பனை பறிபோய்விடும். 

ஒவ்வொரு சிறு தொழில்களிலும் விற்பனைச் சரிவுகளுக்குக் காரணமானவர்கள் விற்பனையாளர்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். 

விற்பனை என்பது பல துறைகளைச் சார்ந்தது. விற்பனை நம்மை என்றுமே வாழ வைக்கும்!

No comments:

Post a Comment