யாரும் எதிர்பாராத அளவு பாதிப்புகள்
இப்படி ஒரு மாபெரும் பாதிப்பு உலகளவில் வருமென்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
கோவிட் 19 தொற்று நோயின் தாக்கம் இந்த வேகத்தில் பரவும்அல்லது இப்படி ஒரு நோய் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் அறியவில்லை. இப்படி ஒரு நோய் உலகளவில் இதுவரை வந்தது இல்லை எம்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி ஒரு தாக்கம்! அப்படி ஒரு வேகம்!
தோழிற் துறையில் உள்ளவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பொது மக்கள் வெளியே போகப் பயப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில் நமது இந்திய நிறுவனங்கள் என்ன நிலைமையில் இருக்கின்றன என்று பார்ப்போம்.
இதில் பெரும் பாதிப்பு என்பது சுற்றுலாத்துறை தான். இதில் பல இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியா செல்லுபவர்கள் பலரும் இந்திய நிறுவனங்களைத் தான் நாடுகின்றனர். அவர்களுக்குத் தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அதுவும் அவர்கள் ஒரளவு இந்தியாவை நம்பியே, இந்தியர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இப்போது இந்தியாவும் உள்ளே நுழைய தடை விதித்திருக்கின்றது. யாரையும் குறை சொல்லுவதற்கில்லை. நாட்டு நலன் தான் முக்கியம்.
எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் சொந்தப் பஸ் வைத்துக் கொண்டு தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணிகளை ஏற்றிச் செல்பவர். அவருக்குப் பலத்த அடி. வெளி நாடுகளிலிருந்து பயணிகள் வருவதில்லை. அதனால் தொழில் பாதிப்பு.
நமது உணவகங்கள் பெரும் பாதிப்படைந்திருக்கின்றன. இப்போது நமது இந்திய உணவகங்களும் சிரமத்தை எதிர் நோக்குகின்ற நேரம். இந்த வியாதி எங்கிருந்து தொற்றுமோ என்று யாருக்கும் தெரியாது. எங்கிருந்தும் தொற்றலாம் என்பது தான் அதன் வரலாறு. உணவகங்களிலிருந்தும் வரலாம். ஏற்கனவே இந்த உணவகங்கள் 'சுத்தத்திற்கு' பேர் போனவர்கள்! இபோது மட்டும் திருந்திருக்கவாப் போகிறார்கள்!
இப்போது நமக்குத் தெரிந்த வரை இந்திய உணவகங்களுகும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்களே அந்தப் பக்கம் இப்போதெல்லாம் எட்டிப் பார்ப்பதில்லை!
மளிகைக் கடைகளிலும் கூட்டங்கள் குறைந்திருக்கின்றன. அத்தியாவசிய பொருள்களை மட்டும் மக்கள் வாங்குகின்றனர். எனது பக்கத்தில் ஒரு மளிகைக்கடை. கூட்டம் எப்போதும் குவிந்திருக்கும். இப்போது கூட்டம் எங்கே போனது என்றே தெரியவில்லை!
வணிகம் செய்வோர் இந்த கொரானா தொற்று நோயை மறக்கவே கூடாது. நமக்கு ஒரு சரியான பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது தான் அந்த பாடம்.
நல்ல காலத்தில் நாலு காசு சம்பாதிக்கணும். கெட்ட காலத்தில் அதனை பயன படுத்த வேண்டும்!
இந்த கோவிட் 18 நாம் அனைவருக்கும் கடுமையான பாடம்! படிப்போம்!
No comments:
Post a Comment