ஈஷா என்கிற ராஜேஸ்வரியின் தற்கொலை தான் நம் மக்களிடையே இப்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு இது பற்றிதான் பேசிக்கொண்டிருப்போம். அதற்கான ஆயுட்காலம் இரண்டு மூன்று வாரங்கள், அவ்வளவுதான்! காரணம் நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை. இனி செய்யாதே என்றாலும் அது என்னவோ மீண்டும் மீண்டும் செய்யத்தான் துடிக்கிறது மனம்!
சரி நாம் இப்போது ஷாலினி பற்றி பார்ப்போம். நாம் சொல்லுவது எல்லாம் ஒரு கொலை குற்றத்திற்கு நூறு வெள்ளி தானா என்பது தான் நமது குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் நீதிமன்றம் அப்படியெல்லாம் செயல்பட முடியாது. ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவர்கள் செயல்பட முடியும். சிறுசிறு குற்றங்களுக்கான தண்டனையின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் இந்த வழக்கின் மூலம் புதிய வெளிச்சம் பிறந்திருக்கிறது. அதனால் அவரைப் பாராட்டத்தான் வேண்டும். அவரை வைத்துத்தான் புதிய சட்டம் உருவாகிறது! அந்தச் சட்டத்தின் முன்னோடி இவர்தான்!
பகடிவதை குற்றங்களுக்கான தண்டனைகள் இது நாள்வரை நமது நாட்டில் இல்லை என்பதாகச் சொல்லப்படுகின்றது. அந்த நிலையில் தான் ஷாலினி என்கிற அந்தப்பெண் வெறும் நூறு வெள்ளியோடு தப்பித்துவிட்டார். ஆனால் வருங்காலங்களில் பகடிவதை குற்றங்களுக்கான தண்டனை அதிகமாக இருக்கும் என நம்பலாம். நூறு வெள்ளி என்பதை இந்த வழக்கோடு முடிவுக்கு வந்துவிட்டது! இது உறுதி.
என்ன தான் சாதாரணத் தண்டனையோடு இவர் தப்பித்தார் என்று நாம் பேசினாலும் வேறு ஒரு கோணத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஐந்து நாள்கள் அவ்ர் சிறையில் இருந்தாலும் அதுவே அவர்க்கு ஆயுள் தண்டனை போன்றது தான். அந்தத் தண்டனையை அவரால் என்றென்றும் மறக்க முடியாத தண்டனை. என்றென்றும் அவர் உற்றத்தால், சுற்றத்தால் சுட்டிக்காட்டப்படும் தண்டனை.
இதைவிட வேறு என்ன தண்டனை வேண்டும்?
No comments:
Post a Comment