சீனப்பள்ளிகளுக்கு மதுபான நிறுவனங்கள் நன்கொடை அளிப்பது கூட யாருக்கும் தெரியாத நிலையில் அந்தச் செய்தி சமீபத்தில் அம்பலத்திற்கு வந்தது!
இப்போது தான் கல்வி அமைச்சிற்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அந்த நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சீனப்பள்ளிகளுக்கு நிதி உதவி செய்கின்றன என்கிற விஷயமே தெரியாதாம்! அடாடா! என்ன உலகமகா நடிப்புடா சாமி! இவர்களுக்குத் தெரியாதாம் நாம் அதை நம்ப வேண்டுமாம்!
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிறுவனங்கள் இதுவரை நூறு கோடிக்கு மேல் நன்கொடைகள் கொடுத்திருக்கின்றனவாம்.
நாம் இங்கே பார்க்க வேண்டியது இந்த நன்கொடைகள் மூலம் சீனப்பள்ளிகளின் கலவித்தரம் குறைந்திருக்கிறதா என்பது மட்டும் தான். இன்று நாட்டில் முதல்தரக் கல்வியைக் கொடுப்பது சீனப்பள்ளிகள் தான் என்று அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்ட ஒன்று. அதனால் தான் மலாய் பெற்றோர்கள், இந்தியப் பெற்றோர்கள் சீனப்ப்ள்ளிகளுக்கே தங்களது பிள்ளைகளை அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தேசிய பள்ளிகளின் தரம் பற்றி எந்தப் பெருமையும் பட வழியில்லை என்பது கல்வி அமைச்சுக்கே தெரியும். தேசிய பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் டியூஷன் என்று ஒன்று இல்லாவிட்டால் பள்ளிகளில் கிடைக்கும் கல்வியே பயனற்றதாக ஆகிவிடும்.
தேசிய பள்ளிகள் நன்கொடைகள் எதனையும் மதுபான நிறுவனங்களிடமிருந்து வாங்குவதில்லை என்பது தெரியும். அதனால் அந்தப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவிட்டதா என்றால் இல்லை என்று தான் பதில்வரும். இதுவே நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. நன்கொடை பெறுவதால் ஒரு பக்கம் தரம் சிறப்பாக இருக்கிறது நன்கொடை வாங்காத பக்கம் வந்தால் தரமோ தட்டுத்தடுமாறுகிறது!
ஆக ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. கல்வித்தரம் மதுபான நிறுவனங்களிடம் இல்லை. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பில் இருக்கிறது. அது தேசியப்பள்ளிகளில் இல்லை சீனப்பள்ளிகளிடம் உண்டு. தேவையற்றதையெல்லாம் அரசியலாக்கி விதண்டாவாதம் புரிவது அரசியல்வாதிகளின் அசட்டுத்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
No comments:
Post a Comment