அந்த பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி என்று சொல்லப்படுகிறது. டிக்டோக்கில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவர் என்று சொல்லுகிறார்கள் இணையவாசிகள்.
நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான். டிக்டோக் போன்ற இணையதளங்களில் இயங்கும் போது பலவிதமான கருத்துகள், விமர்சனங்கள் எல்லாம் வரவே செய்யும். அவைகள் அனைத்தும் நல்லவைகளாக இருக்கும் என்று நினைக்கவே கூடாது. அதுவே தவறு. இது போன்ற பொதுத்தளங்களில் இயங்கும் போது நல்லவைகள் சில வரலாம் ஆனால் பொல்லாதவை பல நூறுகள் வரும். அவைகளைத் தவிர்க்கவே முடியாது.
நாம் ஓர் அடாவடி சமுதாயம்! நமது பெற்றோர்கள், அடாவடி செய்வதற்கென்றே ஒருசிலரை பெற்றுப் போட்டிருக்கிறார்கள்! அவர்களை யாராலும் திருத்த முடியாது. ஒன்று மட்டும் அவர்களுக்குப் புரிவதில்லை. இன்று நாம் என்ன செய்கிறோமோ அதுவே தான் திரும்ப நமக்கு வரும், தாக்கும் என்று அவர்கள் மறந்து விடுகின்றனர். எப்படியும் அது அவர்களை விடப்போவதில்லை.
இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று என்னதான் நாம் சொன்னாலும் கொஞ்சம் நாளைக்குத்தான் அவர்கள் பயத்தோடு தலைமறைவாக இருப்பார்கள். எந்த நடவடிக்கையும் இல்லையென்றால் பின்னர் தங்கள் வேலையை மீண்டும் ஆரம்பித்துவிடுவார்கள்! காரணம் அந்த வடிவத்தில் தான் அவர்கள் பிறப்பு அமைந்திருக்கிறது! காவல் துறையைத் தவிர வேறு யாராலும் அவர்களை மாற்ற முடியாது!
காவல்துறைக்குப் புகார் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் இல்லையென்றால் 'சைபர்கிரைம்' என்றும் ஒன்று இருக்கிறது. இந்த முறை நிச்சயம் ஏதோ ஒன்று நடக்கும் என எதிர்பார்க்கலாம். இதனை வளரவிடக் கூடாது என்பது அவர்களுக்கும் தெரியும்.
இதுபோன்ற தற்கொலைகள் நடக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பமாகும். காவல்துறை அல்லது சைபர்கிரைம் எப்படி இதனைக் கையாளப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment