நம் நாட்டிலுள்ள ஒரு பகுதியினரைக் கல்வி ஒதுக்கீடு விஷயத்தில் எந்த அளவு புறக்கணிக்கின்றார்கள் என்பது மிகவும் வருத்தமான விஷயம். நமது நாட்டில் இந்தியர்கள் என்றால் ஏதோ புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதாக ஒரு சாரார் அதிலும் அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
மற்ற இனத்தாரை விடுங்கள். நம் இன அரசியல்வாதிகளே நம்மைக் கண்டு கொள்வதில்லை என அறியும் போது எங்கே போய் முட்டிக் கொள்வது? நம் இனத்திற்கு அதிகம் துரோகம் செய்தவர்கள் நம் இன அரசியல்வாதிகள் தான். அதில் ஏதும் மாற்றுக் கருத்தில்லை.
நமது சமுயாத்தை ஒரு போராட்ட சமுதாயமாகவே மாற்றியவர்கள் நமது தலைவர்கள் தான். நாம் செய்யும் போராட்டங்களைச் சீன சமுதாயம் செய்வதில்லை மலாய் சமுதாயம் கூட செய்வதில்லை. அவர்களுக்குப் போராட்டங்கள் தேவைப்படவில்லை.
ஆனால் நம் நிலை அப்படியா? எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படாத நிலையில் நமக்குப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன. தமிழ்ப்பள்ளிகளா, போராட வேண்டியுள்ளது. கோவில் பிரச்சனையா, போராட வேண்டியுள்ளது. குடியுரிமைப் பிரச்சனையா, போராட வேண்டியுள்ளது. மெட் ரிகுலேஷன் பிரச்சனைய, போராட வேண்டியுள்ளது. பள்ளிக்கூட நிலத்தில் பங்கு கேட்கிறான், போராட வேண்டியுள்ளது. கோவில் நிலத்தில் உரிமை கொண்டாடுகிறான், போராட வேண்டியுள்ளது. இப்படி வாழ்நாள் பூராவும் போராட்டம் தான். இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஏன் தீர்வு காணமுடியவில்லை? எல்லாம் நம் தலைவர்களின் கைங்கரியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு பிரச்சனையைக் கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. அப்போதைக்கு அப்போது கொஞ்சம் மெழுகு பூசி ஒட்டுவது தான் அவர்களின் வேலையாக செய்து வந்திருக்கிறார்கள்!
ஒரு பிரச்சனையையும் தீர்த்து வைக்க முடியாத நிலையில் கல்விக்காக ஏகப்பட்ட பணத்தை அரசாங்கத்திடமிருந்து தவறாமல் பெற்று விடுகிறார்கள்! கேட்டால் சமுதாயமாம். சமுதாய அக்கறையாம்.
கல்விக்காக இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இவர்களால் நடக்காத காரியம். நாமே தான் பொங்கி எழ வேண்டும்!
No comments:
Post a Comment