கேள்வி
நடிகர் விஷால் செய்வது சரியா?
பதில்
திரைப்பட உலகினர் அனைவரும் அவரை எதிர்க்கின்றனர். அவருடைய செயல் தமிழ்த் திரை உலகத்தைப் பாதிக்கும் என்பது தான் பொதுவான குற்றச்சாட்டு. காரணம் தமிழ்த் திரை உலகம் முற்றிலுமாக அரசாங்கத்தை நம்பியே செயல்படுகிறது.
மற்ற மாநிலங்களை விட தமிழ் நாட்டில் தான் அதிகமான வரிகளினால் தமிழ்ச் சினிமா பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் அரசாங்கத்தின் ஆதரவு தமிழ்ச் சினிமாவுக்கு மிகவும் தேவை என்கிற நிலையில் தான் சினிமா உலகம் உள்ளது.
இந்த நிலையில் தான் விஷாலின் அரசியல் நுழைவு தமிழ்ச் சினிமாவைப் பாதிக்கும் என்று சினிமா உலகினர் தங்களது எதிர்ப்பைக் காட்டுகின்றனர். அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்த அது முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதே பலரின் கருத்து.
சரி! அப்படியே போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெற முடியுமா? அதுவும் முடியாது என்பது விஷாலுக்கே தெரியும். பின் ஏன் அவர் போட்டியிட வேண்டும்? அவர் தி.மு.க. வால் களம் இறக்கப்படுபவர் என்பது அவர் மீதான இன்னொரு குற்றச்சாட்டு. தி.மு.க. ஏன் அவரை இந்தப் போட்டிக்கு இழுக்க வேண்டும்? அது தான் தி.மு.க. வின் தந்திரம்! காரணம் அந்தத் தொகுதியில் கணிசமான தெலுங்கு மக்களின் வாக்குகள் இருக்கின்றன. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதசூதனன் ஒரு தெலுங்கர். அதே போல விஷாலும் ஒரு தெலுங்கர். அங்குள்ள தெலுங்கு மக்களின் வாக்குகளைப் பிரிப்பது தான் விஷாலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. இப்போது விஷால் பண நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் போட்டியின் மூலம் அவரது பண நெருக்கடியை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது!
மற்றபடி விஷால் அரசியலில் நுழைவதால் அவர் சொல்லுவது போல் பெரியதொரு மாற்றத்தை அவரால் கொண்டு வந்து விட முடியாது! அதெல்லாம் சாத்தியமில்லை. அப்படியே அவர் ஒரு முழு நேர அரசியலுக்கு வந்தாலும் அவர் தூக்கி எறியப்படுவார்! பண நெருக்கடி தான் அவரின் இந்த அரசியல் நுழைவு என்பது தான் உண்மையாக இருக்க முடியும்!
எப்படியோ இந்த இடைத் தேர்தலில் அவர் போட்டியிட தகுதிப் பெறவில்லை! அது தான் அவருக்கு நல்லது! வருங்காலங்களில் எதுவும் நடக்கலாம்!
No comments:
Post a Comment