Tuesday, 10 April 2018
நாமும் பஞ்சாபியரைப் பின்பற்றுவோம்!
பஞ்சாபியர்கள் அல்லது சீக்கியர்கள் (நாம் பொதுவாக வட இந்தியர்களை வங்காளிகள் என்போம்!) இவர்கள் இந்தியர்கள் என்று சொல்லப்பட்டாலும் சீக்கியர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள பஞ்சாபியர்களைப் பற்றி முகநூலில் ஒரு செய்தியைக் காண நேர்ந்தது.
இதோ உங்கள் பார்வைக்கு: 33 விழுக்காடு வரிகட்டுபவர்கள்
67 விழுக்காடு தர்மம் செய்பவர்கள்
45 விழுக்காடு இந்திய ராணுவத்தினர்
59000 சீக்கிய வழிப்பாட்டுத் தலங்கள் மூலம் ஒரு நாளைக்கு 59,00,000
ஏழைக்ளுக்கு இலவச உணவு
இந்தியாவின் மக்கள் தொகையில்
இவர்கள் 2.5 விழுக்காடு மட்டுமே!
இந்தியாவின் ஒரு மாநிலம் வெறும் 2.5 விழுக்காடு மக்கள் தொகை கொண்டஒரு மாநிலம் மேற்கண்ட முகநூல் செய்தியைப் பார்க்கின்ற போது அது வெற்றி பெற்ற மாநிலம் என்றே கருத வேண்டியுள்ளது.
பொதுவாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாதாக நாம் கேள்விப்படுவதில்லை. அந்த மாநிலத்தில் அரசியல்வாதிகள் மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பதாக செய்திகள் இல்லை.
இந்திய இராணுவத்தில் பஞ்சாபியரின் பங்கு 45 விழுக்காடு என்னும் போது அதனை நாம் பாதி பேர் பஞ்சாபியர் என்றே எடுத்துக் கொள்ளலாம். அப்படியென்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பஞ்சாபியர் இராணுவத்தில் பணி புரிகிறார். ஏதோ ஒரு வகையில் அவர்களின் குடும்பங்களில் வறுமை சூழல் குறைவு. அதனால் தர்ம சிந்தனை அதிகமாகவே அவர்களிடையே உண்டு. ஒரு வேளை இராணுவத்தில் பணி புரிவதாலேயே தர்ம சிந்தனை வருகிறதோ! நல்லது தானே, நடக்கட்டும்.
நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர்களின் வழிப்பாட்டுத் தலங்களில் ஒவ்வொரு நாளும் 59,00,000 ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். நிச்சயமாக இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தர்மம் தலை காக்கும் என்பார்கள். அதனால் தான் அந்த மாநிலத்தை தர்மம் காக்குகிறதோ?
பஞ்சாபியர்களைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லப்படுகின்ற ஒரு விஷயம் உண்டு. அவர்கள் மிகவும், மகா மகா கஞ்சர்கள் என்று சொல்வதுண்டு. இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்கள் பணம். அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அப்படி இருப்பதால் தான் இன்று அவர்கள் மிகவும் மேல் நிலையில் இருக்கிறார்கள். நம் நாட்டில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், கவால்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள், கணக்காளர்கள் -
இப்படி எல்லாத் துறைகளிலும் அவர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி நிறைய ஜோக்குகள் இருக்கின்றன. எல்லாம் அவர்களின் கஞ்சத்தனத்தைப் பற்றியது தான்!
பஞ்சாபியர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டாராம் ' எங்களைக் கேலி செய்கிறீர்களே, நீங்கள் எந்த பஞ்சாபியராவது கை நீட்டிப் பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?" உண்மை தான். இந்தியாவில் இல்லை என்கிறார்கள், நிச்சயமாக மலேசியாவில் இல்லை!
நாம் பின்பற்றுவதற்குரியவர்கள் பஞ்சாபியர்கள். உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அது தான் அவர்களின் முன்னேற்றம்.
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment