Sunday, 15 April 2018
வாக்களிக்க வரவேண்டாம்...!
வருகின்ற 14-வது பொதுத் தேர்தல் மே மாதம் 9-ம் தேதியென தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அனைவரும் அறிந்ததே. 9-ம் தேதி என்பது புதன் கிழமை. பொதுவாகத் தேர்தல் ஆணையம் புதன் கிழமைகளில் தேர்தலை வைப்பதில்லை. இது வரையில் தேர்தல் என்பது சனிக்கிழமைகளில் தான் நடந்திருக்கின்றன. இது தான் காலங்காலமாக நடந்து வருவது.
ஆனால் இம்முறை புதன் கிழமை வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? சனிக்கிழமை என்றால் அன்று பள்ளி விடுமுறை. பொதுவாக பொது விடுமுறை தான் வாக்களிக்க் ஏற்ற நாள். புதன் கிழமை என்பது வேலை நாள். அரசாங்கம் அன்று விடுமுறை என்று அறிவித்திருக்கிறது. ஒரு நாள் விடுமுறை என்பது அரசாங்க வேலைகள் அனைத்தும் ஒரு நாள் முடக்கும். தனியார் நிறுவனங்கள் விடுமுறை கொடுக்காது. முடிந்தால் தொழிலாளர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் போய் வாக்களித்து விட்டு வரலாம். அதனை அவர்கள் செய்வார்கள் என நம்பலாம்.
இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள். சிங்கப்பூரில் சுமார் 5,00,000 (ஐந்து லட்சம்) மலேசிய வாக்காளர்கள் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. புதன் கிழமை வேலை தினம் ஆகையால் சிங்கப்பூரிலுள்ள மலேசிய வாக்காளர்கள் வாக்களிக்க வருவது குறையும் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.. இவர்கள் பெரும்பாலும் எதிர்கட்சியினருக்கே வாக்களிப்பார்கள் என்பதும் தெரியும். அதனால் தான் இந்த ஏற்பாடு!
இத்தனை ஆண்டுகள் இல்லாத ஒரு நிலையை இந்தத் தேர்தலில் நாம் பர்க்கிறோம். துணைப் பிரதமர் ஹமிடி "அர்சாங்கம் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லுவில்லை, வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லவுமில்லை. அது உங்கள் விருப்பம். முதலாளி விடுமுறை கொடுத்தால் வாருங்கள் இல்லாவிட்டால் வர வேண்டாம்!"
சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அது சொல்லப்பட்டாலும் மலேசியர்களுக்கும் அது பொருந்தும். இப்படி ஒரு கருத்து சொல்லப்படுகிறது என்றால் நமது அரசாங்கத் தரப்பு மிகவும் ஆட்டங்கண்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது! இதற்காக நாம் வருந்துகிறோம்.
அரசியல்வாதிகள் தங்களது ஆட்சி காலத்தில் கடமைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தேர்தல் காலத்தில் கொஞ்சிக் குலாவுவதும் நமக்கு ஒன்றும் புதிதல்ல!
நாம் ஒவ்வொருவரும் நூறு விழுக்காடு நமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
வாக்களிக்கத் தவற வேண்டாம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment