Saturday 29 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (60)

 தொல்லைகள் அல்ல!

நாம் எதனை எடுத்தாலும், நமக்குத் துன்பங்கள் நேர்ந்தாலோ ஏதோ ஒரு சில அசம்பாவிதங்கள் நேர்ந்தலோ  அனைத்தையும் தொல்லைகளாகக் கருதுகிறோம்.

தொல்லைகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நிகழ்வும் வரும் போகும். வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கும். அவைகள் தொல்லைகள் என்று நினைத்தால் தொல்லைகள் தான். தொல்லைகள் இல்லை என்றால் அவைகள் தொல்லைகளே இல்லை. 

எவைகளை நாம் தொல்லைகளாகப் பார்க்கிறோம்? வீட்டில் குழந்தைகள் செய்கின்ற அட்டகாசங்கள் தொல்லைகளாகத் தெரிகின்றன.  வேலைக்குச் சரியான நேரத்தில் போவது தொல்லையாகத் தெரிகிறது. ஏன்! அலுவலக்த்தில் போய் வேலை செய்வது கூட சிலருக்குத் தொல்லையாகத் தெரிகின்றது. 

எதனை நாம் தொல்லைகளாகக் கருதுவதில்லை!  சினிமா பார்ப்பது ஜாலியாக இருக்கிறது. தொல்லையாகத் தெரிவதில்லை. நண்பர்களோடு அரட்டை அடிப்பது ஜாலியாக் இருக்கிறது, தொல்லையாக இல்லை. சினிமாக்காரர்களின் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது  தொல்லை என்றே தெரிவதில்லை!

ஆக எதனை விரும்பிச் செய்கிறோமோ அவைகள் நமக்குத் தொல்லைகளாகத் தெரிவதில்லை! 

அப்படி என்றால் நாம் என்ன செய்யலாம்? எவை தொல்லைகள் என்று நினைக்கின்றோமோ அவைகள் எல்லாம் ஜாலியானவைகள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் போதும்.  பிள்ளைகள் தொல்லையில்லை  அவர்கள் நமது குடும்பத்தின் வருங்கால டாக்டர்கள் என்கிற எண்ணத்தோடு அவர்களை அணுகுங்கள்.  இல்லாவிட்டால் ஓடி ஆடி விளையாடுவதால் தானே அவர்கள் பிள்ளைகள்? சப்பாணியாக இருந்தால் நம் மனம் என்ன பாடுபடும்.  கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். வேலைக்குச் சரியான நேரத்தில் போவது தொல்லையாகத் தெரிகிறதா?அப்படி செய்வதன் மூலம் நாம் ஒர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறோம் என்று நினையுங்கள்.  வேலை செய்வது கூட தொல்லையா? அந்த சம்பாத்தியத்தில் நமது குடும்பம் பிச்சை எடுக்காமல் கௌரவமாக வாழ முடிகிறதே அதற்காக நன்றி சொல்லுங்கள். 

எல்லாம் தொல்லை, தொல்லை என்பதை ஒதுக்கிவிட்டு அந்தத் தொல்லைகளின் மூலம் என்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன  என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து அந்த நல்லவைகளை ஏற்றுக் கொண்டு தொல்லையற்ற வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ளுங்கள். 

தொல்லையா? அப்படி ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment