Wednesday, 22 June 2016
கடைசிவரை யாரோ......!
கடைசிவரை நம்மோடு யார் இருப்பார்.....?
நல்ல கேள்வி. கையில் பணம் இருந்தால் அந்த 'நாலு' பேரும் நம்மோடு பணம் இருக்கும்வரை இருப்பார்கள்! கவலையே வேண்டாம்!
நமது பிள்ளைகள், சொந்தங்கள் பந்தங்கள், உறவுகள், நண்பர்கள் ஏன் மருமகள்கள் கூட நம்மோடு கடைசிவரை இருப்பார்கள்! இடையில் பணம் கைமாறினால் ஏமாற்றம் அடைந்தவர்கள் "நாங்கள் ஏமாளிகளா?" என்று விலகி விடுவார்கள்! அப்போது சொந்தமாவது, பந்தமாவது எதுவும் இல்லை!
அதனால் 'இருக்கும்' போதே பிரித்துக் கொடுக்க வேண்டாம். ஆனால் இருக்கும் போது எழுதி வைத்துவிடுங்கள். 'போன' பிறகு தான் அது பயன்பாட்டுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தி விடுங்கள். பிள்ளைகள் மனதில் ஒரு கேள்விக்குறி இருந்து கொண்டே இருக்க வேண்டும்! நமது விருப்பத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிவிடலாம்! நமக்கு அந்த உரிமை உண்டு!
அப்போது தான் நாம் இருக்கும் வரையில் கொஞ்சமாவது கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ முடியும்.
கடைசிவரை யார்? உங்கள் பணம் தானே! இந்த உலகின் எந்த மூலைமுடுக்குகளுக்கு நீங்கள் போக வேண்டுமானாலும் அந்த பணம் உங்களோடு வரும். போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரும்! போக வேண்டிய இடங்களுக்குப் போங்கள்; பார்க்க வேண்டிய இடங்களைப் பாருங்கள். தாஜ்மகாலா? சீனப்பெருஞ்சுவரா? திருப்பதியா? திருவாருர் தேரா? எல்லாவற்றையும் பார்க்கலாம். எந்தக் கட்டுப்படும் இல்லை!
'அட! நடக்க முடியாத காலத்திலே இதெல்லாம் எப்படி முடியும்?' என்று யோசிக்கிறீர்களா? அது ஒரு பிரச்சனையே இல்லை! விமான நிலையத்தாரிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டால் போதும். அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுவார்கள்! சக்கரவண்டியை வைத்துக் கொண்டு உலகையே சுற்றி வரலாம்.
இரத்தினவள்ளி அம்மையாரைப் போல இருந்த இடத்திலிருந்தே நாலு பேருக்குத் தான தர்மம் செய்ய ஆசைப்பபடுகிறீர்களா? செய்யலாம்! தான தர்மம் செய்வது இறைவனுக்குப் பிடித்தமான ஒன்று. சொர்க்கத்தில் உங்களுடைய தான தர்மங்கள் உங்களுடைய கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும் என்று வேதங்கள் கூறுகின்றன.
கடைசிவரை அந்தப் பணம் உங்களோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். "என் மகன் தானே" என்று பாசத்தினால் நேசக்கரம் நீட்டினால் உங்கள் மருமகள் உங்களை "யாரோ" ஆக்கிவிடுவார்!
இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்! கடைசிவரை நீங்கள் ஹீரோவாகவே இருங்கள்!
"ஜீரோ" வாழ்க்கை வேண்டாம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
life is not logic..yet logic is the first guidepost for rational living..but wisdom is something more..
ReplyDeletehttp://www.huffingtonpost.com/entry/how-this-harvard-psycholo_n_3727229.html?amp%3BadsSiteOverride=in&ir=India§ion=india
ReplyDeleteread this in this connection http://www.booksandideas.net/Twenty-Years-After-The-Social-Meaning-of-Money.html
ReplyDeleteread this in this connection http://www.booksandideas.net/Twenty-Years-After-The-Social-Meaning-of-Money.html
ReplyDelete