Thursday, 16 June 2016
கேள்வி - பதில் (17)
கேள்வி
தமிழகத்தில் சமஸ்கிருதத்தைத் திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி தமிழர்களை உசுப்பிவிடுகிறரே, நியாயமா?
பதில்
நியாயமா! அநியாயமா! என்று சொல்லுகின்ற நிலைமையில் நாம் இல்லை! அவர் தமிழர்களை மட்டும் குறிவைக்கிறார். ஏன் திராவிடர்களுக்கு அவர் பாதுகாப்புக் கொடுக்கிறார் என்பதும் நமக்குப் புரியவில்லை!
திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழ் நாட்டில் அரியணை ஏறிய போது இருமொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதாக அறிஞர் அண்ணா அறிவித்தார். அது தமிழும் ஆங்கிலமும். அவருக்குப் பின்னர் வந்த கருணாநிதி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூட்டணி ஐம்பது ஆண்டு காலம் தமிழகத்தைத் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர்; புரிகின்றனர்.
இந்தக் கூட்டணியினர் தமிழை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டனர். ஆங்கிலத்தை அரியணை ஏற வைத்துவிட்டனர்!
தமிழின் புறக்கணிப்பிற்கு முதன்மையானவர் கருணாநிதி தான். அவரையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றினர். தமிழ் நாட்டின் அநேக சீரழிவுகளுக்குக் கருணாநிதியே காரணம்.
தமிழரின் பாரம்பரியம், தமிழரின் கலாச்சாரம் அனைத்தையும் திட்டம் போட்டு கவிழ்த்தவர் கருணாநிதி. இப்போது கூட அவர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசுவதில்லை. அவர் அது பற்றி பேசுவதில்லை என்றால் தமிழர்களை அவர் மதிக்கவில்லை என்பது தான் பொருள்?
கருணாநிதி சொன்னவைகளுக்கெல்லாம் தலையை ஆட்டினான் தமிழன். அதற்குத் தண்டனையாக இன்று தனது மொழியையே தனது தாய் மண்ணில் இழந்து நிற்கிறான் தமிழன்.
அவர் சொன்னவைகளைப் புறக்கணித்திருந்தால் ஒருவேளை நல்லது நடந்திருக்கலாம்!
இப்போது தமிழன் ஜெயலலிதாவிடம் கையேந்தும் நிலைமை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment