இப்போது எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றன. அவர்களின் அடைவு நிலையை விளம்பரப் படுத்துகின்றனர்.
குறிப்பாக இப்போது பி.கே.ஆர். ஆளும் மாநிலங்கள் தங்களை விளம்படுத்திக் கொள்வது என்பது நடந்து கொண்டிருக்கிறது. இப்படி செய்வதில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
இன்றைய சூழலில் இப்படி விளம்பரப்படுத்தினால் தான் அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பொது மக்களுக்குத் தெரிகிறது. சமீபத்தில் எங்களது மாநிலமான நெகிரி செம்பிலான் மாநிலம் தங்களது அடைவு நிலை பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது. அவர்களது சாதனையை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தவரை நமக்கு எதிர்க்கட்சி என்றால் அது ம.இ.கா. தான் அதாவது நெகிரி மாநிலத்தில். இந்த நான்கு ஆண்டுகள் ம.இ.கா.வினர் ஓர் எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை என்று நான் நினைப்பதுண்டு. காரணம் அவர்கள் அப்படி செயல்படுவதற்குக் காரணம் ஏதும் இல்லை. எல்லாமே சரியாக நடக்கும் போது ம.இ.கா.வினர் என்ன குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியும்? என்று இப்படி அவர்கள் நினைக்கலாம். இன்னொரு பக்கம் குற்றம் செய்யாமல் ஓரு ஆட்சி நடக்க முடியுமா என்பதும் உண்மை தான்.
ஆனால் ம.இ.கா.வினருக்கு இரண்டு பக்கமும் அடி விழும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் எந்தக் கேள்வி எழுப்பினாலும் அதற்குக் காரணமானவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்! அப்புறம் எங்கே அவர்கள் கேள்வி எழுப்புவது? இத்தனை ஆண்டுகள் அவர்கள் தானே பதவியில் இருந்தார்கள்! யாரைக் குற்றம் சொல்லுவது?
சமீபத்தில் ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா.வினரைப் பார்த்து சில கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆட்சியில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள் என்பதாக ம.இ.கா.வினருக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால் ஒரு சத்தத்தையும் காணோம். அவர்களால் எந்த ஒரு கேள்வியையும் எழுப்ப முடியவில்லை.
ஆக, நெகிரி மாநிலத்தைப் பொறுத்தவரை ம.இ.கா. வினரால் பெரிய குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியாது என்றே நினைக்கிறேன். அதனால் ஆட்சியில் உள்ளவர்கள் அனைத்தையும் சரியாகச் செய்கிறார்கள் என்று சொல்ல இயலாது பிரச்சனைகள் உண்டு. போகப் போக தெரியவரும்.
No comments:
Post a Comment