அந்தக் காலத்தில் ஆங்கிலப்பள்ளிகளில் சேர்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்.
. பெரும்பாலும் படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளே பள்ளியில் படிப்பார்கள். ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பவர்கள் என்றால் அது பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். பள்ளிகளில் அவர்களின் ஆக்கிரமிப்பு அதிகம்.
எனது தந்தையார் பிரச்சனையைச் சமாளிக்க போர்ட்டிக்சனில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று அங்குள்ள பாதிரியாரிடம் சிபாரிசு கடிதம் கேட்டார். அவரோ "நீயோ பால்மரம் வெட்டுபவன் உன் பிள்ளை என்ன பேனா பிடித்து எழுத வேண்டுமோ?" என்று சொல்லி கடிதம் கொடுக்க மறுத்துவிட்டார். அவரும் இலங்கைத்தமிழர். அது அவர்களின் பிறவிக்குணம். பின்னர் என் தந்தையார் பள்ளி அலுவலகத்தில் அதிகாரியாக இருந்த ஓர் இலஙைத்தமிழருக்கு இலஞ்சம் கொடுத்துத்தான் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். வீட்டில் வளர்த்த ஒரு பசு மாட்டை விற்று அந்தப் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்துத் தான் நான் பள்ளியில் சேர முடிந்தது. அது நடந்தது 1948-ம் ஆண்டு. அப்படி ஒரு நிலைமை இப்போது இல்லை.
படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் போகும் பள்ளிக்கூடம் என்பதால் முதல் நாளே என் தந்தையார், வேர்வையைத் துடைக்க ஒரு கைக்குட்டை சிலுவார் பாக்கெட்டில் வைத்துவிட்டார், என் தாயார் சட்டைப்பாக்கெட்டில் ஒரு ஜெபமாலையை வைத்து "மறவாதே! எப்போதும் வைத்திருக்க வேண்டும்" என்று கட்டளையிட்டுவிட்டார். இன்றுவரை இரண்டையுமே மறக்கவில்லை. அதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்றார்களோ?
அறிவோம்: நம்மை ஏழ்மை நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக கல்வி இருந்தால் போதும். வேறு எதுவும் தேவை இல்லை. கல்வி இல்லையென்றால் நாம் அடிமைகளாகத்தான் வாழ வேண்டும்.
No comments:
Post a Comment