ஒரு சில விஷயங்களில் நமது பிரதமர் இரட்டை வேடம் போடுகிறாரோ என்று நாம் ஐயுற வேண்டியுள்ளது.
சில நாட்களாகவே பிரச்சனை ஒன்று மலேசியரிடையே பேசுபொருளாக விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஜாக்கிம் ஒரு பக்கம் பிரதமர் இலாக்காவைச் சேர்ந்த இஸ்லாமியத்துறை அமைச்சர் ஒரு பக்கம். இவர்கள் சேர்ந்து முஸ்லிம்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது பற்றியான வழிகாட்டி ஒன்றை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.
அதுபற்றியான எதிரொலிகள் நாடெங்கும் ஒலித்தன. நாட்டில் இப்போது அப்படி என்ன பிரச்சனையை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர்? பார்க்கப் போனால் முஸ்லிம் அல்லாதவர்கள் ஜாக்கிம் போன்ற அமைப்புகளினால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை பலர் அறிவர்.
நம்மிடம் உள்ள கேள்வி எல்லாம் இஸ்லாமியத்துறை அமைச்சர், பிரதமர் அலுவலகத்திலேயே குடிகொண்டிருப்பவர். பிரதமருக்குத் தெரியாமல் அவர் சுயமாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். காரணம் மக்களைப் பாதிக்கக் கூடிய எந்த ஒரு முடிவையும் இஸ்லாமியத்துறை அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எடுக்க வழியில்லை. பிரதமர் தான் இது போன்ற பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.
ஒரு வேளை சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏதேனும் வரையறை வரலாம். காரணம் பிரதமரே தைப்பூச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் என்பது தெரிகிறது. அவரும் சரி அவருடைய அமைச்சர்களும் சரி தைப்பூச நிகழ்வுக்கு முன்னரே கலந்து கொள்வதை வழக்கத்திற்குக் கொண்டுவருவர் என்றே தோன்றுகிறது.
என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் சமய நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது மற்ற நாட்களில் கலந்து கொள்ளலாம் என்பதற்கான முன்னோட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதென்ன முஸ்லிம்களுக்குத் தெரியாதா? இவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
என்ன சொல்ல? முஸ்லிம்களை மேயுங்கள். மற்றவர்களின் மீது கை வைக்காதீர்கள்.
No comments:
Post a Comment