Thursday 17 May 2018

ம.இ.கா. ...அடுத்து என்ன?


ம.இ.கா.வைப் பற்றி பேசும் போதெல்லாம் நமக்குக் கோபம் வருவது இயற்கையே. காரணம் அந்த அளவுக்கு - அதுவும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர்களை நினைக்கும் போதெல்லாம் - இந்திய சமூகத்தைச் சீரழித்து விட்டார்களே என்கிற கோபம் நமக்கு உண்டு.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அவர்களின் நிலை இன்னும் மோசமாகி விட்டது. அது நாம் எதிர்பார்த்த தோல்வி தான். அந்த அளவுக்கு இந்தியர்கள் அவர்கள் மேல் வெறுப்பை உமிழ்ந்திருக்கின்றனர்.

அது சரி, இனி மேல் இவர்களின் நிலை என்ன?  இவர்களில் பெரும்பாலானோர் பட்டம், பதவி இல்லாமல் வாழ முடியாதவர்கள்! டத்தோ பட்டங்களுக்காக ஏங்குபவர்கள்! அல்லது செனட்டர் அ,ல்லது யாரோ ஒரு ஒருவருக்கு உதவியாளர்  - இப்படித்தான் அவர்கள் சிந்திப்பாளர்கள்!  இனி அவர்கள் ம.இ.கா. கிளைகளை விட்டுவிட்டு அவர்களின் பார்வையைப் பக்காத்தான் பக்கம் திருப்புவார்கள் என நம்பலாம்! அவர்கள் அப்படி திருப்பவில்லை என்றால் அவர்களின் கண் ம.இ.கா.வின் சொத்துக்கள் மீது இருக்கலாம்! ஆமாம் ம.இ.கா.வுக்கும் கணிசமான சொத்துக்கள் இருக்கின்றன, பல கோடிகள் என சொல்லப்படுகின்றது. அதனைக் கைப்பற்ற வேண்டும் என நினைப்பவர்கள் அங்கேயே ஒட்டிக்கொண்டு இருக்கலாம்.

ஆமாம், கட்சியை இவர்களால் காப்பாற்ற முடியுமா? முடியும். அதற்கு நிறைய உழைப்பு வேண்டும். அவர்கள் உழைப்பைப் போடத் தயாராக இல்லை!  இத்தனை ஆண்டுகள் அரசாங்கம் கொடுத்த மானியங்களை வைத்து ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள் இனி அந்த ஆட்டம் ஆட முடியாது!  பணம் இலவசமாக வர வழியில்லை! சொந்தப்பணத்தையும் போடத் தயாராக இல்லை!

ம.இ.கா. வால் இனி ஒரு பத்தாண்டுகளுக்காவது இந்தியர்களின் வெறுப்பிலிருந்து தப்பிவிட முடியாது! அதுவும் பக்காத்தான் அவர்களின் கடமையைச் சரியாகச் செய்தால் - இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் -  அவர்கள் ஏன் ம.இ.கா. பக்கம் போகப் போகிறார்கள்.

ஆளும் பக்கத்தான் கட்சியோடு ஒப்பிடும் போது ம.இ.கா.வில் படித்தவர்கள் இல்லை! படித்தவர்களை அவர்கள் வரவேற்பதில்லை!  படிக்காதவர்களை வைத்துக் கொண்டு தான் அவர்கள் இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள்!

அடுத்து என்ன?  இனி ம.இ.கா. தலைதூக்க முடியாது!

No comments:

Post a Comment