Monday 7 May 2018

இது தான் கடைசி வாய்ப்பு...!


இது தான் கடைசி வாய்ப்பு, நண்பர்களே! சொல்ல வேண்டிய  நிலையில் இருக்கிறேன். சொல்லுகிறேன். தவற விட்டால் அதற்கானத் தண்டணையை அனுபவிக்கப் போகிறவர்கள் நாமாகவும் இருக்கலாம்; நமது பிள்ளைகளாகவும் இருக்கலாம்; நமது பேரன் பேர்த்திகளாகவும் இருக்கலாம்.

நாளை நடக்கும்  (9.5.2018)  பதினான்காவது பொதுத் தேர்தலைத் தான் சொல்லுகிறேன். 

இந்தத் தேர்தல் டாக்டர் மகாதிர்- நஜிப்புக்குமானப் போட்டி என்பதை மட்டும் நினைவிற் கொள்ளுங்கள்.  மகாதிர் தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர். அவர் கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியவர். அவருடைய வயது 93. இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து நடப்பு அரசாங்கத்தை  எதிர்க்கிறார் என்றால்....? நமது நாட்டின் நடப்பு எப்படி இருக்கிறது - எவ்வளவு அபாயகரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  வேலை இல்லாப் பிரச்சனை, GST பிரச்சனை. விலைவாசி பிரச்சனை இன்னும் பல.  அது பொதுவான நமது நாட்டின் பிரச்சனை.

நமது இந்தியர்களின் பிரச்சனைகள் என்ன? மிகப் பெரிய பிரச்சனை இந்தியர்களின் குடியுரிமை, அடையாளக்கார்டு. ஆமாம் இங்கு இந்த நாட்டில் பிறந்த லட்சக்கணக்கான பேர் நீல நிற அடையாளக் கார்டுகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஏதோ ஒரு தவறைச் சுட்டிக்காட்டி அடையளக்கார்டுகள் கொடுக்கப்படுவதில்லை. அந்தத் தவறுகளை வெளியிலிருந்து யாரும் வந்து செய்வதில்லை. செய்வதே அரசாங்க ஊழியர்கள் தான்! மடையர்களை வேலையில் வைத்துக் கொண்டு மற்றவர்களையும் மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! நம்மை நாடற்றவர்கள் என்று சொல்லும் போது  நமக்கு அது வலியைத் தருகிறது. நேற்று, முந்தாள் வந்த வங்காளத்தேசிகள் இந்நாட்டுக் குடிமகனாக தலை நிமிர்ந்து நடக்கிறார்கள்.  ஒரே காரணம் அவர்கள் இஸ்லாமியர்கள். இப்படி ஒரு காட்டுமிராண்டி அரசாங்கத்தை எங்கே பார்க்க முடியும்?

யாரும் கேள்விகள் கேட்க முடியாத ஒரு நாதியற்ற சமூகமாக நாம் இருக்கிறோம். நமது மொழியின் நிலை என்ன. இரு மொழி திட்டம் என்று சொல்லி தமிழை ஒழிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் அம்னோவும், ம.இ.கா.வும் சேர்ந்து தமிழை ஒழித்து விடுவார்கள். 200 ஆண்டுகளாக இந்த நாட்டில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  அதற்குப் பெருமை சேர்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.  ஆனால் தமிழ் அவமதிக்கப்படுகிறது.  நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நமது இனம் தலை நிமிர, வருங்காலத்தில் நமது இனம் செம்மையான வாழ்க்கை வாழ அரசியல் மாற்றம் வேண்டும். வெறும் வாக்குறுதிகள நம்பி வாக்களிக்க வேண்டாம். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை!  மீண்டுமா வாக்குறுதி!

நண்பர்களே இது கடைசி வாய்ப்பு.  பாரிசானை வீழ்த்த வேண்டும். டாகடர் மகாதிர் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

டாக்டர் அரசாங்கம் தான் வரவேண்டும். நோயாளியிடம் அரசாங்கம் இருக்கக் கூடாது!


No comments:

Post a Comment