Sunday 27 May 2018

கல்வியில் மாற்றம் வரும்...!


கல்வியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம். நமது புதிய கல்வியமைச்சர் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்னும் நம்பிக்கை உண்டு.

புதிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் ஓர் இஸ்லாமிய கல்வியாளராக இருந்தாலும் அவரின் கீழ் கல்வி அமைச்சு சிறப்பாக இயங்கும் என நம்பலாம்.  ஆரம்பத்தில் அவர் தீவிரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டாலும் பின்னர் அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொல்லப்படுகிறது.

டாக்டர் மஸ்லீ கல்வி முறை மாற்றத்தில் தனக்கு உத்வேகம் தறுவது பின்லாந்து நாட்டின் (Finland) கல்வி முறை என்கிறார்.  க்டந்த காலங்களில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருமே அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு தான் தங்களின் வேலைகளைச் செய்ய முடிகிறது. ஆசிரியர்களும் சரி கல்வி கற்கும் மாணவர்களும் சரி அனைவருமே சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்பது தான் உண்மை.


ஆனாலும் இனி இந்த நிலை இருக்காது. மாணவர்கள் கூன் விழுந்த முதுகுடன் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு போக வேண்டிய நிலை மாறும்.

அதுவும் இல்லாமல் நமது மாணவர்கள் மூன்று மொழிகள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் டாக்டர் மஸ்லீ எதிர்பார்க்கிறார். தேசிய மொழி அதே சமயத்தில் ஆங்கிலம் முக்கியத்துவம் வாய்ந்த மொழியாகவும், மூன்றாவது மொழியாக தாய் மொழியும் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார்.

டாக்டர் மஸ்லீ நாட்டில் நல்லதொரு கல்வி முறை அமைய நிச்சயம் வழிகாட்டுவார் என்று நம்பலாம். 

நம்மைப் பொறுத்தவரை தமிழ்ப்பள்ளிகள் தமிழ்க்கல்வி தொடர வேண்டும். தேசிய மொழியும், ஆங்கில மொழியும் தொடர வேண்டும்.  நமது கல்வியாளர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்ற முறையில் கல்வி கற்கும் வாய்ப்பை நமது மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் அவர்களின் மூலம் கல்வி மேம்படும் என நம்பலாம்!

No comments:

Post a Comment