டாக்டர் மகாதிர் இனங்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் அரசியல்வாதி என்பதை எல்லாகாலங்களிலும் நிருபித்து வந்திருக்கிறார். நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வருகின்ற சட்டமன்ற தேர்தல் வரை அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டு தான் இருப்பார். கடைசி நேரம் வரை அவர் மல்லுக்கட்டிக் கொண்டு தான் இருப்பார். அதில் அவருக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை, நஷ்டம் இல்லை.
டாக்டர் மகாதிர் ஆரம்பகால அரசியலே இனப்பிரச்சனையிலிருந்து தான் ஆரம்பமாகிறது. இனப்பிரச்சனை தான் அவர் கையிலெடுத்த முதல் ஆயுதம்.
அந்த காலகட்டத்தில் மலாய்க்காரர் யாரும் மேற்கல்வி படிக்கவில்லையா? முன்னாள் பிரதமர், காலஞ்சென்ற துங்கு அப்துல் ரஹ்மான் காலகட்டத்தில் தான் மகாதிரும் அவரது மனைவியும் டாக்டர்களாகப் படித்து வெளியேறினார்கள். இன்னும் பலர் வேவ்வேறு பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இவர் பதவிக்கு வந்து என்ன செய்தார்? கல்வித் தகுதியைக் குறைத்தார் iஇன்றுவரை அது தொடர்கிறது! முக்கால்வாசி பட்டதாரிகளுக்கு சாதாரண அரசாங்க வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள்! இது தான் இவரின் சாதனை!
சமீபத்திய தகவலின்படி எஸ்.பி.எம். ஏ கிரேட் பெற 65 மதிப்பெண்கள் போதுமாம்! 90,000 பேர் கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையாம்! இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த மாணவர்கள் தானே மருத்துவம் பயில வேண்டும்! இல்லாவிட்டால் மலாய் மாணவர் எண்ணிக்கை குறைந்து போய் விடுமே!
இது தான் டாக்டர் மகாதிர் மலாய் மாணவர்களுக்குச் செய்த மாபெரும் வளர்ச்சி! அவர் தான் அதனை மெச்சிக்கொள்ள வேண்டும்!
இது போன்று பலவற்றைச் சொல்லலாம்! இந்த நாட்டை ஊழல் நாடாக ஆக்கியவர் மாபெரும் சிற்பி டாக்டர் மகாதிர்!
இப்படி இவர் செய்த தவறுகளையெல்லாம் மற்ற இனத்தவர்கள் மீது தூக்கிப் போடுவதுதான் அவர் பாணி அரசியல்! அதைத்தான் அப்போதும் செய்தார். இப்போதும் செய்கிறார்.
இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு இப்போது தான் ,மலாய்க்காரர்களை ஒன்று சேர்க்க போராட்டம் செய்யப் போகிறாராம்! அவர்கள் வழிநடத்தப் போகிறாராம். இப்போது தான் மலாய் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போகிறாராம். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சீன, இந்தியர்கள் தான் தடையாக இருக்கின்றனராம்! புதிதாக கண்டுபிடித்திருக்கிறார் இருபத்திரண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்!
வெறுப்பு! வெறுப்பு! வெறுப்பு! இதுதான் டாக்டர் மகாதிரின் அரசியல்! எல்லா காலங்களிலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அவர் சீக்கிரம் உணர்வார்!
No comments:
Post a Comment