இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது!
இந்தியாவின் வட மாநிலங்களின் ஒன்றான மணிப்பூர் என்கிற சிறிய மாநிலம், பற்றி எரிவதாக சமீபத்திய செயதிகள் கூறுகின்றன. மலைகள் நிறைந்த மாநிலம் அத்தோடு மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் ஓர் இந்திய மாநிலம்.
இந்த மாநிலத்தின் அமைப்பை எடுத்துக் கொண்டால் அது வங்க தேசம், சீனா, மியான்மார் போன்ற நாடுகளை ஒட்டியும் உள்ள ஒரு மாநிலம் என்று சொல்லப்படுகின்றது. அந்த மக்களும் பார்ப்பதற்கு சீனர் அல்லது பர்மியர் போன்ற தோற்றம் உடையவர்கள் போலத் தோற்றத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது நடப்பது இனக் கலவரம் என்று சொல்லப்படுகின்றது. சுமார் 77 நாள்கள் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டபின்னரும் இந்தியப் பிரதமர் தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார். அதில் உண்மை இருக்கலாம். காரணம் அவர் வெளி நாடு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அந்த செய்தி அவருக்குப் போய்ச் சேராமல் இருந்திருக்க வாய்ப்புண்டு.
இனக்கலவரம் என்று சொன்னாலும் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது அது அப்படித் தோன்றவில்லை. மதக்கலவரங்களில் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. ஸ்ரீலங்காவில் இன அழிப்பு நடந்ததே அதுவே இங்கும் நடந்தேறியிருக்கிறது. அப்பாவி மக்கள் மீதான அதே பாணி தாக்குதல்.
சுமார் 300 கோவில்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. 1500 வீடுகள் சாம்பலாகி விட்டன. எல்லாமே அதிகாரப்பூர்வமற்ற செய்திகள். பிரதமருக்கு இந்த செய்திகள் கொடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனராம்! உடனடி நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்.
இதற்கிடையே மேலும் சில செய்திகள் நம்மை அதிரச் செய்கின்றன. மதக் கலவரங்கள் என்றால், குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் ஏதோ ஒரு திருவிழா போன்றே கொண்டாடப்படும்! பெண்கள், குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவர். அது போதாது என்பதனால் இளம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர். சுற்றிலும் இளைஞர் கூட்டம், கைகளில் கம்புகளோடு இரண்டு இளம் பெண்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டதாம்.
நாட்டின் பிரதமரோ "இப்படி நூற்றுக்கணக்கில் நிகழ்வுகள் தினசரி நடக்கின்றன! நான் என்ன செய்ய முடியும்?" ஏன்று தனது இயலாமையை இயம்பியிருக்கிறார்! நம்மால் என்ன செய்ய முடியும்?
மணிப்பூரில் நடக்கும் இந்த அழிப்பு வேலை எப்போது முடிவுக்கு வரும் என்று நம்மால் சொல்ல முடியாது. முடியும் வரை அது தொடரத்தான் செய்யும். போராளிகள் பின் வாங்கி விட்டால் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து விடும்
அழிப்பு தொடரும் என்றே தோன்றுகிறது!
No comments:
Post a Comment