Tuesday, 20 March 2018
மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!
சமீபத்தில் ஐ.நா. வெளியிட்ட "மிகவும் மகிழ்ச்சியான நாடுகள்" பட்டியலில், முதல் பத்து நாடுகள் பட்டியலில், முதல் நிலையில் வந்திருப்பது ஃபின்லாந்து!
அந்தப் பத்து நாடுகள்: 1) ஃபின்லாந்து 2) நார்வே 3) டென்மார்க் 4) ஐஸ்லாந்து 5) சுவிட்ஸலாந்து 6) நெதர்லாந்து 7) கனடா 8) நியுஸ்லாந்து 9) சுவீடன் 10) ஆஸ்திரேலியா
நமக்கு நெருக்கமான, மிகவும் அறிந்த, அணுக்கமான, பரிச்சையமான நாடுகளான நியுஸ்லாந்தும், ஆஸ்திரேலேயாவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.
சரி, மகிழ்ச்சியில் இடம் பெற்றிருக்கும் முதல் நாடான ஃபின்லாந்து முதல் இடத்தை எப்படிப் பிடித்தது? அதற்குக் காரணம் என்ன?
இலவசக் கல்வி, தரமான சுகாதார வசதி - இது தான் மகிழ்ச்சியின் முதல் படி. கல்வி எல்லாருக்கும், எல்லா மக்களுக்கும் ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் இன்றி ஒரே விதக் கல்வி கிடைக்கும் போது மக்களுக்கு என்ன கவலை? பெற்றோருக்கு என்ன கவலை? அத்தனையும் தகுதி அடிப்படையில் தான்! யாரும் யாரையும் குறை சொல்ல ஒன்றுமில்லை! வேலை வாய்ப்புக்களும் தகுதி அடிப்படையில் தான். நிற அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ இல்லாத போது மக்களுக்கு என்ன கவலை!
அப்படியே மாமியார்-மருமகள் கவலை என்றாலும் தரமான சுகாதார வசதிகள் உண்டு! போய்ப் படுத்துக் கொள்ள வேண்டுமானாலும் படுத்துக் கொண்டு சிகிச்சைப் பெறலாம்! தரமான சேவைகள் கொடுக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கும் உள் நாட்டினரைப் போலவே எல்லா வசதிகளும் செய்துத் தரப்படுகின்றன. அவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
பொதுவாக வரிகள் கூடுதலாக இருந்தாலும் கவலைப்பட ஒன்றுமில்லை. அனைத்தும் மக்கள் நலனுக்கே செலவிடப்படுகின்றன.
தாய் மொழிக் கல்விக்கு அவர்கள் எதிரிகள் அல்ல. தேவையான அனைத்து மொழிகளும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. தாய் மொழிகள் உக்குவிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சின்னஞ்சிறிய பிரச்சனையிலிருந்து பெரிய பிரச்சனை வரை மகஜர் கொடுப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது தான் வாழ்க்கை என்றால் நம்மால் எந்தக் காலத்திலும் அவர்கள் இடத்தை நிரப்ப முடியாது!
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! மனிதனுக்கு வேறு என்ன வேண்டும்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment