Friday, 23 March 2018
ம.இ.கா. ஒன்றும் செய்யவில்லையா...?
முகநூலில் ஒரு நண்பர் வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் அரசியல் களத்தில் இறங்கி விட்டார் என்றே தோன்றுகிறது! நமக்கு ஒன்றும் அதில் ஆட்சேபணையில்லை. பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமான பேசுவர்.
அந்த நண்பர்: டாக்டர் மகாதிர் இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்து விட்டார்? ஒன்றுமே செய்யாத அவருக்கு, நீங்கள் என்ன அவருடைய பூட்ஸ் காலை நக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களா?
நல்ல கேள்வி. ஆனால் நாங்கள் டாக்டர் மகாதிர் இந்திய சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்னும் கேள்வியையே எழுப்பவில்லை! ம.இ.கா, ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது, இந்தியர்களுக்கான எந்த ஒரு பிரச்சனையும் தீர்ந்த பாடில்லையே என்று தானே புலம்பிக் கொண்டிருக்கிறோம்!
டாக்டர் மகாதிர் காலத்தில் மட்டும் அல்ல இப்போதும் கூட அதே தூக்கத்தோடு தானே ம.இ.கா. நடை போட்டுக் கொண்டிருக்கிறது! இப்போதும் ம.இ.கா. பெரிதாக ஒன்றையும் சாதித்துவிட வில்லையே! டாக்டர் மகாதிர் காலத்திலும் அதே ம.இ.கா. இப்போது நஜிப் காலத்திலும் அதே ம.இ.கா! சாதனை என்றால் ஏட்டில் மட்டும் தான். பெரும் பெரும் திட்டங்கள் ஏட்டில்! ஆனால் ஒரு சிறிய காய் கூட நகர்த்திய பாடில்லை! சில மாதங்களுக்கு முன்னர் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் மாபெரும் பெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இப்போதைய அதன் நிலை என்ன என்பது யாருக்குமே தெரியாது! பரம ரகசியம்! கேட்டால் அடுத்த ஐந்தாண்டில், அடுத்த பத்தாண்டில் ....என்னும் பதில் தான் வரும்!
தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழித் திட்டம் என்பது ம.இ.கா. செய்த துரோகம் தானே! இன்றைய நிலையில் சில பள்ளிகள் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டன என்றால் ம.இ.கா. கொடுத்த நெருக்குதல் தானே! இதனை அவர்கள் மறுக்க முடியுமா? இன்று இந்தியர்கள் நாடற்றவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டதற்கு யார் காரணம்? ம.இ.கா. தானே! ம.இ.கா. இந்தியர்களைக் கேவலப்படுத்தியதே தவிர அவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் கொண்டுவரவில்லை!
ஆக, எல்லாக் காலங்களிலும் ம.இ.கா. வினால் இந்தியர்கள் பாதிப்பு அடைந்தார்களே தவிர எந்த நன்மையும் அடையவில்லை! ம.இ.கா. தலைவர்கள் நன்மையடந்ததை இந்தியர்கள் நன்மை அடைந்ததாகச் சொல்லுவது சரியான கிறுக்குத்தனம்!
அவர்கள் செய்தது எல்லாம்: டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ, துன், டத்தோ, செனட்டர், சபாநாயகர், அமைச்சரின் உதவியாளர் - இவைகளெல்லாம் இந்தியரின் முன்னேற்றம் என்றால் இவைகளின் மூலம் சமுதாயம் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை!
ஆமாம்! ம.இ.கா. இந்தியர்களுக்கு ஒன்றும்செய்யவில்லை!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment